உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம்

19

குற்றியலுகர ஈற்று மரப்பெயர்ச் சொல்லுக்கு அம் என்பதே சாரியை என்று கூறும் ஆசிரியர் (கமுகங்காய், தெங்கங்காய்) மெல்லெழுத்து வல்லெழுத்தாகாத மரப்பெயரும் உண்டு என்கிறார் (416).

வேப்பு

வேம்பு கடம்பு என்பவை, 'வேப்பு கடப்பு' என்று வழக்கில் உண்மையை நாம் காண்கிறோம் (வேப்பங்காய், க ப்பங்கிளை).அதனால், உரையாசிரியர்கள், வலியா மரப் பெயரும் உள என்பதால், வலிக்கும் மரப் பெயரும் உண்டு என்று கொள்க என்கின்றனர். உரை கண்டார், நூல் கண்ட ார் நிலையை அடையும் இட ங்கள் இத்தகையவை.

பூங்கொடி எனலாமா? பூக்கொடி எனலாமா? சொல்லலாம் என்பது தொல்காப்பியம் (296).

ஊனம்

ரண்டும்

உடல் ருவகையாகக் கூறப்படும். ஊன் உடல்; ஒளி உடல் என்பவை அவை. ஊன் உடலில் ஏற்படும் குறை 'ஊனக் குறை' எனப் பட்டது.இன்றும் ‘ஊனம்’ உடற்குறைப் பொருளில் வழங்குவதனை நாம் அறிய முடிகின்றதே (270). ஊனம் பற்றித் தொல்காப்பியர் கூறுவதால், அது தமிழ்ச் சொல் என்பதற்கு ஐயமில்லையே!

கோயில்

கோயில் என்று சிலர் வழங்குகின்றனர்.

கோவில் என்றும் வழங்குகின்றனர்.

இவற்றுள் எது சரியானது? இரண்டும் சரியானவைதாமா? “இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்

என நூற்பா அமைத்துளார் தொல்காப்பியர் (293).

கோ என்பதன் முன் இல் என்னும் சொல் வந்தால் இயல்பாக அமையும் என்கிறார். முதல் உரையாசிரியர் இளம்பூரணர் ‘கோயில்’ என்கிறார். நச்சினார்க்கினியர் 'கோவில்' என்கிறார். அவ்வாறானால் இரண்டும் சரியா?

நன்னூலார் உடம்படுமெய் வருவது பற்றிய நூற்பாவை,

“இ ஈ ஐவழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும் ஏமுன் இருமையும்

உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்”

என்று அமைத்துளார். இதன்படி ஏனை உயிர்வழி வவ்வும் என்பது கொண்டு 'கோவில்' என்றனர்.