உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

41

ய, வ இரண்டும் வருமென்றால் 'ஏ' என்பதற்குக் கூறியது போல் ஏ, ஓ முன் இருமையும் என்று நன்னூலார் சொல்லியிருக்க வேண்டுமே! முடிவு செய்தற்கு வழக்குகளை நோக்குதல் வேண்டும். இருபதாம் நூற்றாண்டு உரைநடையில் கோவில் இடம் பெறுவதை அன்றி, அதற்கு முன்னை நூற்பெயர், செய்யுள் வழக்கு என்பவற்றில் ஓரிடத்துத் தானும் கோவில் இடம் பெறவில்லை. ஆதலால் ஆசிரியர் தொல்காப்பியர் ஆணைப்படி ‘கோஇல்' என இயற்கையாகவே எழுத வேண்டும். இல்லையேல் வழிவழி வந்தவாறு கோயில் என்றே எழுத வேண்டும்.

“வாயில் வந்து கோயில் காட்ட

“கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி”

“கோயில் நான்மணிமாலை

(சிலப்பதிகாரம்)

(நூற்பெயர்)

ன்னவை கொண்டு தெளிக. யகர உடம்படுமெய் இயல்பாக வருதலும், வகர உடம்படுமெய் சற்றே முயன்று வருதலும் நோக்கின் விளக்கம் ஏற்படும்.

காயம்

‘காயம்' என்பது தொல்காப்பியத்தில் ‘விண்'ணைக் குறித்தது.“விண் என வரூஉம் காயப் பெயர்" என்றார் அவர் (305). இப்பொழுது ஆகாயம் என வழங்குகின்றது.

அகம்

அகம் என்னும் சொல்லின்முன் ‘கை’ சேர்ந்தால் அகம் + கை = அங்கை ஆகும் என்கிறார். அவ்விதிப்படி அகம் + செவி = அஞ்செவி என்றும் அகம்+கண் = அங்கண் என்றும் வழங்குகின்றன (310).

அங்கை என்பது பொதுமக்கள் வழக்கில் ‘உள்ளங்கை” என் றுள்ளது. ‘உள்ளங்கால்' எனவும் ‘உள்ளகம்' எனவும் வழங்குகின்றன. முறைப்பெயர்

இன்னார் மகன் இன்னார் என்னும் வழக்கம் என்றும் உண்டு. கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று வெளிப்படுத்தியும் சேந்தங் கூத்தனார் என்று (சேந்தனுக்கு மகனாராகிய கூத்தனார்) தொகுத்தும் கூறுதல் வழக்கம். இன்னொரு வழக்கமும் தொல்காப்பியர் காலத்தில் பெருக வழங்கியது. அதற்கு விரிவாக இலக்கணம் கூறுகிறார் (347 -350).

பெரியவர்கள் பெயரைச் சொல்லுதல் ஆகாது என்பவர், ‘இன்னார் தந்தை’ என மகன் அல்லது மகள் பெயரைச் சுட்டி அவர்க்குத் தந்தை அல்லது தாய் என முறை கூறல் இக்கால வழக்கம்.