உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம்

19

சிறப்புப் பெயரைப் பின்னே வைத்து, இயற்பெயரை முற்பட வைத்தல் ஆகாது என்பதை வலியுறுத்தவே இதனைக் கூறினாராம் (524). ஒரு சொல் பலபொருள்

கால் என்பது பல பொருள் ஒரு சொல். உறுப்பு, சக்கரம், காற்று, கால்பங்கு, கால்வாய் முதலாய பலபொருள்களை யுடையது. இவ்வொரு சொல், இப் பல பொருளுக்கு இட ப மாகி வருதலை அறிய வகை என்ன?

கால், கை, தலை என்னும் இடத்து உறுப்பு என்றும், 'கால் பார் கோத்து' என்னும் இடத்துச் சக்கரம் என்றும், புனல் அனல் கால் என எண்ணுமிடத்துக் காற்று என்றும், ஒன்றே கால் என்றும் இடத்துக் கால் பங்கு என்றும், கண்வாய் கால்வாய் என்னும் போது நீர் வருகால் என்றும் அறிய முடிகின்றது. இவ்வாறு அறியும் முறையை ஆசிரியர் கிளவியாக்கத் தில் சுட்டுகிறார். பொருள் மயக்கம் உண்ட ாகா வகையில் பொருள் காண வழிகாட்டுகிறார்.

66

அவற்றுள்,

வினைவேறு படூஉம் பலபொருள் ஒருசொல்

வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் நேரத் தோன்றும் பொருள்தெரி நிலையே"

என்பது அது (535).

வேற்றுமை

தொல்காப்பியர்க்கு முன்னர் வேற்றுமை ஏழாக எண்ணப் பட்டுள்ளது. முதல் வேற்றுமையாகிய எழுவாய் வேற்றுமை விளியாகும் நிலையையும் முதல் வேற்றுமையின் திரிபாகவே கொண்டு அதனைத் தனித்து எண்ணாமல் இருந்துளர். ஆனால் தொல்காப்பியர்,

“வேற்றுமை தாமே ஏழென மொழிப”

என்று கூறி,

“விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே

எனத் தனித்து எண்ணியுள்ளார் என்பது அவர்தம் நூற்பாக்களின் அமைதியால் விளக்கம் ஆகின்றது. வேற்றுமை எட்டு என எண்ணப்பட்ட

வகை அது.

பெயர், விளி

வேற்றுமையை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு என எண்ணாமல்,

66

"அவைதாம்,

பெயர் ஐ ஒடு கு

இல் அது கண் விளி என்னும் ஈற்ற”

என எண்ணியுள்ளார்.