உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

ஐ என்றால் இரண்டாம் வேற்றுமை என்றும்... கு என்றால் நான்காம் வேற்றுமைஎன்றும்...

கண் என்றால் ஏழாம் வேற்றுமை என்றும்... அறியச் செய்துள்ளார்.

59

ஒன்று இரண்டு என எண்ணிக்கையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு எனினும் பெயர், ஐ, ஒடு என உருபுகளைக் கொண்டு எண்ணும் வகையால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஏனெனில் பொருள் வேறுபடுத்தும் சொல்லே பெயராகி விடுகின்றதே. ஆதலால் இந்நெறி மேற்கொண்டனர் நம்முன்னோர்.

ஐ என்னும் உருபு வெளிப்பட்டோ மறைந்தோ வரக் கண்டதும் அதன் பொருள் புலப்பட்டு விடும். ஆதலால் உருபையும் அவ்வுருபு வழியாக ஏற்படும் பொருளையும் தெளிவாக அறிந்துகொள்ள வேற்றுமை உருபு-பொருள்களைப் படைத்துளர்.

முருகன் என்னும் பெயர் எழுவாய் நிலையில் நின்று உருபுகளை ஒட்டும்போது முருகனை, முருகனால், முருகனுக்கு, முருகனின், முருகனது, முருகன்கண், முருகா என வேறுபடுகின்றது. உருபு மாற மாறப் பொருளும் மாறுபடுதலால் வேற்றுமை என்றனர்.

“முருகன் வாழ்த்தினான்

"முருகனை வாழ்த்தினான்

என்பவற்றில் வாழ்த்தியவனும் வாழ்த்துப் பெற்றவனும் வேற்றுமையாகிவிட வில்லையா! இவ் வேறுபாட்டை உருபு ஆக்குதலால் வேற்றுமை உருபு எனப்பட்டது.

உருபு என்பது வடிவம் அடையாளம். அரசுத்தாள் என்பதன் அடையாளம் உருபா.

வினை, பண்பு, உவமை, உம்மை இன்னவற்றின் அடை யாளச் சொற்களையும் உருபு என்றது இதனால்தான்.

மரம் நட்டினான்; மரத்தை நட்டினான்

மரம் வெட்டினான் ; மரத்தை வெட்டினான்

ஊரை அடைந்தான். ஊரை நீங்கினான் ‘காளையைப் போன்றான்’ இப்படியெல்லாம் வருவனகொண்டு இன்ன உருபு இன்ன பொருளில் வரும் எனக் கண்டு அம்மரபு போற்றுமாறு காத்தனர். ஆயினும் சில உருபு மயக்கங்களும் உண்டாயின. சிலவற்றை ஏற்கவும் சிலவற்றை மறுக்கவும் ஆயின.