உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

என் வீடு என்பது, எனதுவீடு என ஆறாம் வேற்றுமையாகும். என் மகள் என்று வரும்போது எனது மகன் எனக் கூட

ாது. ஏன்?

வீடு உடை மைப் பொருள். மகள் உடைமைப் பொருள் அன்று. உறவுப் பயர்; உரிமைப்பெயர். எனக்கு மகள் என உறவுரிமை தருதலே முறையாகும் (578). இந்நாளில் அடிக்கப்படும் திருமண அழைப்பிதழ் களில் பல இவ்வேறுபாடு அறியாமல் அடிக்கப்படுவதைக் காணலாம்.

எவ்வளவோ நுண்ணிய அறிவால் கண்டு வைத்த கட்டுக் கோப்பான நம் மொழி அக்கறை இல்லாத மக்களால் அழிக்கப்படு வதற்கு இஃதொரு சான்றாம்.

உருவாக்கிக் காத்த உயர்ந்த அறிவாளர் வைத்துள்ள மொழிச் சுரங்கம் இலக்கணம் என்னும் உணர்வு மக்களுக்கு ஏற்பட்டால் இத்தகு குறைகள் ஏற்படா.

வேற்றுமை வரிசை

சொற்கள் பெயர் வினை இடை உரி என நான்காக எண்ணப்படினும் பெயர், வினை என்னும் இரண்டனுள் அடங்கும். அப்பெயரே முதல் வேற்றுமை; அப்பெயராகிய எழுவாய் வினைபுரிதல் விளக்கமே வாழ்வியலாகும். அவற்றை முறையே வைப்பு முறையால் வைத்த அருமையது இரண்டாம் வேற்றுமை முதலியனவாம். இவ்வருமையை முதற்கண் கண்டுரைத்தவர் உரையாசிரியர் தெய்வச்சிலையார். அவர் கூறுமாறு:

"யாதானும் ஒருதொழிலும், செய்வான் உள்வழி யல்லது நிகழா மையின் அது செய்து முடிக்கும் கருத்தா முன் வைக்கப்பட்டான்.

அவன் ஒரு பொருளைச் செய்து முடிக்குங்கால் செய்யத் தகுவது இதுவெனக் குறிக்க வேண்டுதலின் செயப்படு பொருள் இரண்டாவது ஆயிற்று.

அவ்வாறு அப்பொருளைச் செய்து முடிக்குங்கால் அதற்கு ஆம் கருவி தேடுதலின் அக்கருவி மூன்றாவதாயிற்று.

அவ்வாறு செய்து முடித்த பொருளைத்தான் பயன்கோடலே அன்றிப் பிறர்க்கும் கொடுக்கும்ஆதலின் அதனை ஏற்றுநிற்பது நான்காவது ஆயிற்று.

அவ்வாறு கொடுப்புழி அவன் கையினின்றும் அப்பொருள் நீங்கி

நிற்பது ஐந்தாவதுஆயிற்று.

அவ்வாறு நீங்கிய பொருளைத் தனது என்று கிழமை செய்தலின் அக்கிழமை ஆறாவது ஆயிற்று.