உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

ஈண்டுக் கூறப்பட்ட எல்லாவற்றிற்கும்

பொதுவாகி நிற்றலின் அவை ஏழாவது ஆயின.

61

டமும் காலமும்

மணிமாலை போல வேற்றுமையமைவு விளக்கம் சிறத்தல் எண்ணி மகிழத் தக்கதாம். நூலாசிரியர் கண் கொண்டு உரையாசிரியர் நோக்கி யுரைக்கும் இன்னவை நூற்பெருமையை மேலும் பெருமை செய்வதாம்.

ஒடு

'ஊராட்சித்தலைவரொடு உறுப்பினர்கள் கூடினர்” இது செய்தித் தாளில் வரும் செய்தி. உறுப்பினர்கள் பலர்; தலைவரோ ஒருவர். ஆயினும் தலைவரோடு என அவர்க்கு முதன்மை கொடுப்பது ஏன்?

"ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே”

என்பது தொல்காப்பிய நாள் தொட்ட நடைமுறை வழக்கம் (575).

விளி மரபு

அம்மை அன்னை தந்தை தங்கை அக்கை தம்பி முதலான முறைப்பெயர்கள் விளிக்கப்படும் பெயர்களாக வழக்கில் மாறாமல் உள்ளன. விளித்தல் அழைத்தல், கூப்பிடுதல். அம்மா, அம்மே, அம்மோ என்றெல்லாம் வழங்குதல் பழமையும், 'அம்ம' என்று அண்மை விளியாம் பழமையும் இவ்வியலால் நன்கு அறியப்படும். “அண்மைச் சொல்லே இயற்கையாகும்” என்றும் விளியேலாமை குறிப்பார் (612).

இம் மரபு தமக்கு முற்றொட்டே வரும் வகையை உணர்த்துமாறே ‘விளிமரபு' என்று பெயரிட்டு வழங்கினார் என்பதும் அறியத்தக்கது.

அவை

வை

கோமான், பெருமாள் என்பன ஈற்றயல் நெடிலாகியவை. விளியாம்போது இயற்கையாய் அமையும் என்கிறார். பெருமானே, பெருமாளே, கோமானே எனவருதல் இருவகை வழக்கிலும் உண்டு.

66

“உளவெனப் பட்ட எல்லாப் பெயரும்

அளபிறந் தனவே விளிக்கும் காலைச்

சேய்மையின் இசைக்கும் வழக்கத் தான

என விளியை விரிவாக்கிப் போற்றுகிறார் (637).

குழந்தை தொட்டுப் பெருமுதுமை வரை மக்கள் வாழ்வில் மட்டுமா? இறையடியாரும்

66

"அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

அன்பினில் விளைந்த ஆரமுதே’

என்று விளிக்கும் விளிமரபு மாறாமரபு அல்லவா!