உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

சொல்லும் பொருளும்.

பெயர் வினை இடை உரி என முறையே சொற்களை எண்ணும் ஆசிரியர் அவற்றின் இலக்கண அடிமூலம் கூறுவாராய்,

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்கிறார்.

தமிழ்ச் சொற்களில் இடுகுறி என்பதொரு சொல் இல்லை என்பதைச் சொல்லி எல்லாச் சொற்களும் பொருள்புணர்ந்தனவே என உறுதி மொழிகிறார் (640).

பெயர், வினை

சொற்கள் இரண்டே என்பாராய்,

“சொல்எனப் படுப பெயரே வினைஎன்று

ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே”

என்பது (643) குடிக்கணக்கு எடுப்பார் தலைக் கட்டு எண்ணுவது போன்ற தாம். தலைக்கட்டு வரி ஊர்ப்பொதுப் பணிக்கு ஊரவர் மதிப்பிட்டுப் பெறும் தொகையாகும். ஆள் எண்ணிக்கையில் இருந்து வரிதண்டலுக்கு விலக்கப்பட்ட முறை போல்வது அது.

பொருளை உணர்த்துவது பெயர். பொருளின் பெயர்ச்சி (புடை பெயர்தல்) வினை. என இரண்டன் பொருந்துதலும் நோக்கத் தக்கது. இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சொல்லென ஆகாவோ எனின், இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும் அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப”

என்பார் (644).

பெண்மகன்

ஆண், பெண், பிள்ளை எனவும்; ஆண்பிள்ளை, பெண்பிள்ளை எனவும்; வழங்கல் உண்டு. ஆண்மகன்; பெண்மகள் என்பனவும் வழங்கு வனவே.

பெருமகள் பெருமாள் ஆகும்; பெருமகன் பெருமான் ஆவது போல. பெண் பெருமாள்’ என்பார் வரலாற்றில் இடம் பெற்றுளார். தொல்காப்பியர்,

“பெண்மை அடுத்த மகன் என் கிளவி”

என்பதைக் குறிக்கிறார். அதனால்,

'பெண்மகன்' என வழங்கப் பெற்றமை அறியவரும்.

உரையாசிரியர் சேனாவரையர், “புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்துப் பெண்மகன் என்று வழங்குப்" என்கிறார்.