உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

63

கல்வி அறிவாற்றலால் தக்கோர் அவையில் முந்தியிருக்கச் செய்யும் கட மை யமைந்த பெற்றோரை நோக்க, மகற் காற்றல் என்பது இருபாலையும் தழுவியபேறும் உண்டெனக் கொள்ளத் தகும். இனி இந்நாளிலும் பெண்மகவை ‘வாடா’ ‘போடா’ என்பதும், ஆண்பெயராக்கி அழைப்பதுடன் ஆணுடையுடுத்து மகிழ்தலும் காணக் கூடியனவேயாம். குறிப்பாகப் பெண்பிள்ளை இல்லார் அவ்வாறு செல்வமாகப் போற்றி மகிழ்தல் அறியலாம். தொல்காப்பியர் நாளை எச்சமாக அதனை எண்ணலாம்.

பெயர்வகை

உயர்திணைப் பெயர் அஃறிணைப் பெயர் என விரிவாகப் பட்டிய லிட்டுக் காட்டும் ஆசிரியர் நூற்பாக்களொடு சங்கத்தார் பெயர்களை ஒப்பிட்டு ஆய்ந்தால் மொழித் தூய்மை பேணும்வழி தானே புலப்படும்.

நிலப் பெயர், குடிப் பெயர், குழுவின்பெயர், வினைப் பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயர், முறைநிலைப் பெயர், சினை நிலைப் பெயர், திணை நிலைப் பெயர், ஆடியற்பெயர், எண்ணியற் பெயர் என்னும் இவை வ இடைக்கால க்கால பிற்கால வேந்தர் முதலோரால் கொண்டு போற்றப்படாமையால் இந்நாளில் முறை நிலைப் பெயர் (அம்மா, அப்பா, அண்ணா, அக்கை) தாமும் ஒழிந்துபடும் நிலைமை எண்ணத் தகும்.சிறுநுண் நச்சுயிரியினால் பேருயிரியாம் மாந்தர் அழிந்துபடுதல் ஆகாது என அறிவியலாளரும் அரசியலாளரும் எடுக்கும் நலத்துறை அக்கறையில் ஒரு சிறிதளவு தானும் மொழித்துறை, பண்பாட்டுத் துறையில் கருத்துச் செலுத்தவில்லையே என்னும் ஏக்கம் உண்டாக்கு வது தொல்காப்பியர் சுட்டிக் காட்டும் பெயர் வகைகள் ஆகும் (647-650).

அவர்கள்

அவன் அவள் அவர் அது அவை என்பன ஐம்பாற் பெயர்கள். இந்நாளில் ‘அவர்கள்” எனப் பலர்பால் வழங்கப்படுகிறது. ‘ஆசிரியர் அவர்கள்' எனச் சிறப்பொருமைப் பெயராகவும் வழங்கப்படுகிறது.

‘கள்' என்பது அஃறிணைப் பன்மைப் பெயர் ஈறு.

அது மக்கட் பெயரொடு ஆண்கள் பெண்கள் அவர்கள் என வருதல்

ஆகாது.

ஆடுகள் மாடுகள் மலைகள் எனவரும் என்பது பழைய மரபு. 'கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே

கொள்வழி யுடைய பல அறி சொற்கே”

என்பது தொல்காப்பியம் (654).