உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பலவின் பாலுக்குரிய ‘கள்’ பலர்பாலுக்கும் வருதல் சங்கத்தார் காலத்திலேயே தோற்றமுற்று வரவரப் பெருக்கமாகிவிட்டது. அவர்கள் எனக் கள்ளீறு இல்லாமல் ஒருவரைச் சொன்னால் அவர் பார்வையே வேறாகிப் 'பண்போடு பேசத் தெரியவில்லை' எனப் பழிப்புக்கும் ஆளாகிவிடுதல் இந்நாளில் கண்கூடு

தாம், தான்

தாம் என்பது பன்மைக்குரிய சொல் (669).

எ-டு: அவர்தாம் கூறினார்; அவர் தம்முடைய பணிக்குச் சென்றார். தான் என்பது ஒருமைக்குரிய சொல் (670).

எ-டு: அவன்தான் கூறினான்; அவன் தன்னுடைய பணிக்குச் சென்றான்.

எல்லாம் என்பது பன்மைச் சொல் (671).

எ-டு: அவர் எல்லாம்; அவை எல்லாம்.

இப்படித் தெளிவாகத் தொல்காப்பியம் கூறியும் இந்நாளை இதழாசிரியர் நூலாசிரியர் தாமும் கண்டு கொள்வதில்லை.

அவர் தன்னுடைய வேலையுண்டு தானுண்டு என்றிருப்பார் - என அச்சிட்ட செய்தி படிப்பார் அப்பிழையைக் கற்றுக்கொண்டு பரப்பாள ரும் ஆகிவிடுகிறாரே!

வினை

வினை என்பதன் இலக்கணம் 'காலத்தொடு தோன்றும்' என்பது. அது 'வேற்றுமை கொள்ளாது' என்பதும் அதன் இலக்கணமே. இதனைச் சொல்லியே வினையியலைத் தொடங்குகிறார்.

மெய்யியல் வல்லாராகிய அவர், செயல் வழியாம் வினையைச் சொல்வதை அன்றித் ‘தலைவிதி' என்னும் பொருளில் ஆளவில்லை. 49 நூற்பாக்கள் அதற்கென வகுத்தும் அவ்வாறு ஆளாமை தாம் கூற எடுத்துக் கொண்ட பொருளமைதியை விடுத்து வேறு வகையில் செல்லார் என்பது நாட்டும்.

‘செய்வினை’ செய்தல்; அதனை நீக்க ‘வினைக் கழிவு’ செய்தல் அறிவியல் பெருகிவருவது போலப் பெருகி வருதலை நினைக்க ஏதோ மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மக்கள் போலத் தோன்றுதல்தானே

உண்மை.

விரைவு

வாரான் ஒருவனும் வருவான் ஒருவனும் விரைவுக் குறிப்பில் வந்தேன் வந்தேன் எனல் உண்டே!