உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

உண்ணப் போவான் ஒருவன் உண்டேன் எனலும் உண்டே!

இது குற்ற மல்லவோ எனின்,

"வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்

ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள என்பனார் புலவர்'

என அமைதி காட்டுகிறார் ஆசிரியர் (726). நிகழ் காலம்

65

மலை நிற்கும் எனவும், கதிர் இயங்கும் எனவும் வழங்குகிறோம். மலை நின்றதும், நிற்கின்றதும், நிற்பதும் ஆகிய முக்காலத்திற்கும் உரியதாக இருந்தும் நிகழும் காலத்துச் சொல்லுதல் வழு இல்லையா? கதிர் இயங்கியது; இயங்குகிறது; இயங்கும்; இவ்வாறு இருந்தும், நிகழ்காலத்தில் சொல்லுதல் வழுத்தானே!

ஆசிரியர் தெளிவிக்கிறார்:

“முந்நிலைக் காலமும் தோன்றும் இயற்கை

எம்முறைச் சொல்லும் நிகழும் காலத்து

மெய்ந்நிலைப் பொதுச்சொல் கிளத்தல் வேண்டும்

என்பது அவர்காட்டும் அமைதி (725).

முக்காலத்திற்கும் ஒத்தியலும் அவற்றைச் 'செய்யும்' என்னும் வாய்பாட்டால் சொல்ல வேண்டும் என வழிகாட்டுகிறார்.

தெளிவு

இச் சுழலுள் போவான் செத்தான் எனின் வழுவாகும் அல்லவோ! அப்படிச் சொல்லுதல் வழக்கில் உண்டே எனின், நிகழப் போவதை உறுதி யாகக் கொண்டு நிகழ்ந்ததாகக் கூறியது அது என்கிறார்.

“வாராக் காலத்து வினைச்சொற் கிளவி

இறப்பினும் நிகழ்வினும் சிறப்பத் தோன்றும் இயற்கையும் தெளிவும் கிளக்கும் காலை

என்பது நூற்பா (730).

இடைச் சொல்

‘நான்’ என்பது தன்மைப் பெயர்.

‘நீ’ என்பது முன்னிலைப் பெயர்.

'நான் நீ' என்று நின்றால் பொருள் விளக்கம் பெறுவது இல்லை. "நானும் நீயும்" என்னும் போது பொருள் விளக்கம் பெற வாய்க்கின்றது; ‘செல்வோம்' எனச் சேர்த்தால் பொருள் முடிபு கிட்டுகின்றது.