உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

சொற்கள் பெயர், வினை எனப் பகுக்கப் பட்டாலும், இத்தகு (உம்) இணைப்புகளும் வேண்டியுள. இவ்விணைப்புச் சொற்களே இடைச் சொற்கள் எனப்படுகின்றன.

இடைச் சொல் என்பதால் சொல்லுக்கு இடையே மட்டும் வரும் சொல் என்பதாகாது.சொல்லுக்கு முன்னும் பின்னும் இடையும் வேண்டும் இடத்தால் வருவது இடைச் சொல் எனப்பட்டது என்க.

டைச் ச் சொல் தான் சார்ந்த பெயரின் பொருளையும் வினையின் பொருளையும் தழுவி நிற்றல் அன்றித் தனித்து நடக்கும் தன்மையது அன்று” என்று ஆசிரியர் கூறுகிறார் (734),

எலும்புகளை ள இணைக்கவும் இயங்க வைக்கவும் இணைப்பு மூட்டுகள் உடலில் இடம் பெற்றிருப்பன போலச் சொற்பொருள் விளக்கத் திற்கு இடைச்சொற்கள் உதவுகின்றன எனல் தகும்.

"யான் அரசன்; யான் கள்வன்" இடைச் சொல் பெறா நிலையில் இத் தொடர்கள் தரும் பொருளுக்கும், “யானோ அரசன்; யானே கள்வன்” என இடைச் சொல் இணைதலால் வரும் தொடர்கள் தரும் பொருளுக்கும் உள்ள வேறுபாடு பளிச்சிட்டுத் தோன்றவில்லையா? இடைச் சொற்கள் சொல்லுறுப்புகளே எனினும் சொல்லுக்கும் பொருளுக்கும்; தொடர்புப் பாலமாக இருப்பவை அவையே.

இனி, இடைச் சொல் தானும் பொருளின்றி வாரா என்பதன்

விளக்கமே,

"கழிவே ஆக்கம் ஒழியிசைக் கிளவியென்று

அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே”

என வருவது முதலான நூற்பாக்கள்.

உரிச்சொல்

இயற்றப்படும் செய்யுள் சுவையும் தெளிவும் உறுதியும் அழகும் கொண்டு விளங்குமாறு இதற்கு இதுவே உரிய சொல் எனத் தேர்ந்து வைக்கப்படும் சொல் உரிச் சொல்லாகும்.

முடியும்.ஆனால்

பெயர் வினை இடை என்னும் முச் சொற்களைக் கொண்டே எடுத்த பொருளைக் கூறிவிட முடியும். ஆனால் உரிச் சொல் தரும் சுவை முதலிய நலங்கள் ஏற்பட்டு ஆழ்ந்து எண்ணவும் மீள மீளக் கற்கவும் வாய்க்காமல் அமையும்.

அவையறிந்து பேசுவார் தம்மைச், சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர், சொல்லின் நடையறிந்த நன்மையவர், சொல்லின் வகை யறிவார் (711 - 713) என்று வள்ளுவர் தொகுத்துக் கூறும் இலக்கணம் அமைந்த சொல் உரிச் சொல் ஆகும்.