உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

67

உரிச் சொல் உணர்வில் நின்று சுவை யாக்குதல், உரிப்பொருள் ஒப்பது எனப் பெயரீடு கொண்டு உணரலாம்.

நிகண்டு

படைப்பாளி கொண்ட பொருள் நயம் படிப்பாளியும் கொள்ளல் வேண்டும் எனின் புரிதல் வேண்டும். காட்சிப் பொருள் போலக் குருத்துப் பொருளை அறிதலின் அருமை நோக்கியே உரிச்சொல் விளக்கமாக நிகண்டு நூல்கள் தோற்றமுற்றன. அந்நிகண்டு நூல்களில் ஒன்றன் பெயர் உரிச்சொல் நிகண்டு என்பது. வழக்காற்றில் நிகழ்கின்றவற்றைக் கொண்டு திரட்டி வைக்கப்பட்ட சொல்லடைவே நிகண்டு என்னும் பொருட் (காரணப்) பெயராகும்.

உரிச்சொல் இயல்

இத்தகு செய்யுட் சொல்லைப் பொருள் உணர்ந்து ஓதிச் சுவைக்கும் வகையில் வழிகாட்டியவர் தொல்காப்பியர். அவர் வகுத்த உரிச் சொல் இயல் அதன் விளக்கமாகும்.

வேண்டும் வேண்டும் சொல்களை உருவாக்கிக் கொள்ள அடிச் சொல்லாகத் திகழும் அருமை உரிச் சொல்லுக்கு உண்டு.

.

தொல்காப்பியர், ‘உறு தவ நனி' என்னும் உரிச் சொற்களைக் கூறி, மூன்று என்னும் எண் தந்து, மிகுதி என்னும் பொருள் தருவன அவை என்கிறார்.

'சால உறு தவ நனி கூர் கழிமிகல்” என ஆறு எண்ணுகிறார் நன்னூலார்.

(நன். 455)

உரிச் சொற்கள் எல்லாவற்றையும் எடுத்து ஓத வேண்டுவது இல்லை; அவற்றுள் பொருள் வெளிப்பாடு உடைய சொல் பொருள் வெளிப் பாடு அரிய சொல் என்பவற்றுள் பின்னதையே கூறினேம் என்கிறார்.

அவ்வாறானால் வெளிப்பட வாராச் சொல்லென அவர் எண்ணுவன வற்றையே கூறுகிறார் என்பது தெளிவாகும்.

மிகுதி

மிகுதிப் பொருள் தரும் உறு என்னும் உரிச்சொல் ‘உறுபசி' என வள்ளுவத்தில் ஆளப்படுகிறது; 'உறுதுயர்' என்பதும் அது.

உறு என்பது உறுதல், உறுதி, உற்றார், உறவு, உறக்கம், உறிஞ்சுதல் உறுவலி முதலிய சொல்லாக்க அடிச் சொல்லாக அமைந்திருத்தலும் நெருக்கம் கட்டொழுங்கு மிகுதி என்னும் பொருள்களைச் சார்ந்தே நடை யிடுதலும் அறியத் தக்கதாம்.

மிகுதிப் பொருள் தரும் ‘தவ என்பது, தவப்பிஞ்சு தவச் சிறிது என மக்கள் வழக்கிலும் இடம் பெற்றுள்ளது.