உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இது, தவம், தவசம், தவசி, தவசு எனச் சொல்லாக்கம் பெற்று வழங்குதலும் காணலாம்.

நல், நன், நன்று, நனவு, நனி, நனை என்பன வாழ்வியல் வளச் சொற்களேயாம்.

மழ, குழ

மழலை, மதலை, குழந்தை, குதலை என்னும் சொற்களை எண்ணிய அளவில் இளமை மின்னலிடல் எவர்க்கும் இயற்கை. தொல்காப்பியர், “மழவும் குழவும் இளமைப் பொருள” என்கிறார். உள்ளங்கள் ஒன்றிப் போகிய வகையால் உண்டாகிய பொருள் அல்லவோ இது. அலமரல்

அலமரல் என்பது தொல்காப்பியர் நாளில் வெளிப்படப் பொருள் வாராச் சொல்லாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்நாளில் ‘அல மருதல்' மக்கள் வழக்குச் சொல்லாகி விட்டது. அலமருதல் சுழற்சிப் பொருளிலேயே வழங்குகின்றது.தெருமரல் என்பதும் அப்பொருளதே. சீர்த்தி

சீர் சீர்மை சீர்த்தி சீரை என்பன வெல்லாம் இலக்கிய வழக்கில் உள்ளவை. முன்னிரண்டு சொற்களும் மக்கள் வழக்கிலும் உள்ளவை. சீர்த்தி என்ன ஆயது? ‘கீர்த்தி’ ஆகிவிட்டது. வேற்றுச் சொல் எனவும் கொள்ளப் பட்டது. சீரை ‘சீலை’யாகிவிட்டது.சீரை என்னும் துலைக் கோல் பொருள் இலக்கிய அளவில் நின்று விட்டது.

குரு

‘குரு’ என்பது ஒளி என்னும் பொருள் தரும் உரிச்சொல். உள்ளொளி பெருக்குவான் 'குரு'. குருந்து, குருந்தம், குருமணி, குருதி என்பன ஒளிப்பொருள் - நிறப் பொருள் - தருவன. குருத்து என்பது மக்கள் வழக்குச் சொல். ஒளியுடன் வெளிப்படுவது அது. குருத்தோலையும் குருத்திலையும் மிக வெளிறித் தோன்றுதல் ‘குரு’ வின் பொருள் காட்டுவன. குருந்தத்துக் குருமணி நினைவில் எழலாமே!

அதிர்வு

66

அதிர்வும் விதிர்வும் நடுக்கம் செய்யும்” என்பது அப்படியே

நடையில் வழங்கும் உரிச்சொற்களாக உள்ளனவே.

66

“அதிர்ந்து போனார்”

“விதிர் விதிர்த்துப்போனேன்”

வழக்கிலும், செய்தித் தாள்களிலும் இடம் பெறும் சொற்கள் தாமே இவை. தொல்காப்பியர் நாளில் அருஞ் சொற்களாக இருந்ததால்தானே விளக்கம் தந்தார்.