உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பலை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

69

கண்ணீரும் கம்பலையும் என்பதோர் இணைமொழி. கண்ணீர் விட்டு அழுவதே அது. அழுகையால் உண்டாகும் ஒலி கம்பலை.

“கம்பலை சும்மை கலியே அழுங்கல்

என்றிவை நான்கும் அரவப் பொருள

என்கிறார் தொல்காப்பியர்.

நீ

அரவம் - ஒலி; நீ இருக்கும் அரவமே இல்லையே என்பது வழக்கில் உள்ளது. பாம்புக்கு அரவம் எனப் பெயர் வந்தமை இதனால் அறியலாம். ‘கமலை’ கம்பலை என்பதன் தொகுப்பே. அழுங்கல் அழுகையால் அறியலாம். கலித்தல் துள்ளல்; அலை ஒலியால் கலித்தல் விளங்கும். ‘சும்’ என்பது மூச்சின் ஒலிக்குறிப்பு.

புலம்பு

ஆற்றுவார் இல்லாமல் புலம்புதல் உண்டு. தானே பேசுதலை ‘ஏன் புலம்புகிறாய்?' என்பதும் வழக்கே. “புலம்பே தனிமை” என்பது தொல் காப்பியம். புலம்பல் உரிப்பொருளுக்கு உரிய நெய்தல் நிலப் பெயர் 'புலம்பு' எனப்படும்.அதன் தலைவன் புலம்பன்!

வெம்மை

கோடைக் காலத்தில் தமிழகத்து வாழும் வளமைமிக்கார் கோடைக் கானைலை நாடி உறைவர். கோடைமலை சங்கச் சொன்றோர் பாடு புகழ் பெற்றது. கோடைக்கு அதனை நாடும் இக் காலநிலைபோல், தொல் காப்பியர் காலத்தே வெப்பத்தைத் தேடி உறையும் குளுமை மிக்க நிலையும் இருந்திருக்கும் போலும் அதனால்,

“வெம்மை வேண்டல்”

என ஓர் உரிச் சொல்லையும் பொருளையும் சுட்டுகிறார். நாம் நம் அன்பர்களைக் குளுமையாக வரவேற்க; குளிர்நாட்டார் ‘வெம்மையாக வரவேற்றல்’ காண்கிறோமே!

பேம், நாம்

குழந்தைகள் அழுமானால் அச்சம் காட்டி அடக்குதல் இன்றும் சிற்றூர் வழக்கம். அவ்வச்சக் குறிப்பு ‘பே பே' என ஒலி எழுப்புதலும் தொண்டையைத் தட்டுதலும் ஆகும்.

'பே' (பேம்) என்னும் குறிப்பு அச்சப் பொருள் தருதல் தொல் காப்பியர் நாளிலேயும் இருந்தது. 'பேய்' என்பதன் மூலம் இப் பேம் ஆகும். ‘ஓர் ஆளும் கருப்புடையும் பேய்' என்பார் பாவேந்தர்.