உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

71

ஒன்றின் ஒன்று நுணுகியவையாக, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் என்பவற்றைச் சுட்டும் இவ்வுரிச் சொல் விளக்கம் அரிய வாழ்வியல் விளக்கமாம்.

ஓயா உழைப்பாளி, ஓயாப் போராளி, ஓயாச் சிந்தனையாளர், ஓயாப் பொருளீட்டாளர் ஓய்வு கொள்ளும் நிலை என்பது யாது?

தம் ஓயாப் பாட்டின் பயன்பாட்டை மீள் பார்வை பார்க்க வேண்டும் அல்லவா!

அவ்வாய்வு தானே ஓய்வின்பயன்!

ஓய்வு என்பது சிந்தித்தலும் அற்றுப் போன நிலை அன்றே! அச் சும்மா இருக்கும் நிலை கோடியர்க்கு ஒருவர் இருவர் அல்லரோ தேடிக் கண்டு கொள்வது! அச் ‘சும்மா' அரும் பொருளுள் அரும் பொருள். ஓய்வு கொள்வார்க் கெல்லாம் பொதுப் பொருளாகக் கைவர வல்லது ஆய்தலேயாம். ஆதலால் ஓய்தலில் நுண்ணியது ஆய்தல்.

ஆய்ந்து கண்ட பொருளை அடக்கிவைத்துக் கொள்வதால் ஆய்ந்து கண்ட பயன் தான் என்ன? அதனால் ஆய்ந்து கண்ட பயன் கருத்துகளைப் பலருக்கும் பல விடத்தும் சென்று கூறுதல் நிழத்தல் ஆகும். குடை நிழற்றல் என்பது நாடு தழுவுதல் போல் இந்நிழத்தல் ஆய்தலினும் நுண்மை யுடையதாம்.

இருந்தும் நடந்தும் நுவலும் நிலையும் இயலாமையாயின் அந்நிலை யிலும் தாம் கண்ட அரும்பயன் பொருள் - நுவன்று நுவன்று வந்த பொருள் - பின் வருவோர்க்குக் கிட்டும் வகையால் நுவன்றதை நூலாக்கி (நுவல் > நூல்) வைத்தல் வேண்டும். அக்கொடை காடை உயர்கொடை என்பதை ஔவையார் “தாதா கோடிக்கு ஒருவர்” என்று பாராட்டுகிறார்.

ஓய்தல் முதல் சாய்த்தல் (வடித்தல்) வரைப்பட்டவை ஒன்றில் ஒன்று நுண்ணியவை ஆதலின் “உள்ளதன் நுணுக்கம்” என்றார்.

எவ்வொரு கடப்பாட்டில் ஊன்றியவரும் தம் ஊன்றுதல் கட னாக உயர்கொடை புரியலாம் என்னும் அரிய வழிகாட்டுதல், உரிச்சொல் வழியாகத் தரப்பெற்றதாம்.

வை

வையே கூர்மை என்பதோர் உரிச்சொல் விளக்கம் (870).

வை என்பதற்குக் கூர்மைப் பொருள் எப்படி வாய்த்தது? 'வை’ என்னும் நெல்லைப் பார்த்தால் - நெல் நுனியாம் மூக்கைப் பார்த்தால் கூர்மை நன்கு புலப்படும். மழிதகடு போலும் கூர்மையுடையது நெல் மூக்காகும்.