உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

வெகுளி

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

“கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள”

(855)

என்பது வண்ணத்தை விலக்கி எண்ணத்தை வெளிப்படுத்தும் உரிச் சொல் விளக்கம்.

சினங் கொண்டார் கண்நிறம் என்ன? அவர் முகத்தின் நிறம் என்ன? இவற்றை நோக்கின் வெகுண்டாரின் முகமும் கண்ணும் காட்டிவிடும். “முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்

காயினும் தான்முந் துறும் ”

என்பது குறள்.

கறுப்பும் சிவப்பும் நிறம் குறித்து வாராவோ எனின்,

"நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப

என்று கூறுவார் (856).

எறுழ்

காளையை அடக்க விரும்புவார் அதன் கொம்பை வளைத்துத் திமிலைப் பற்றித் தாவி ஏறி அடக்குதல் வழக்கம்.திமிலுக்கு ‘எறுழ்’ என்பது பெயர். எறுழ் என்பதன் பொருள் வலிமை என்பதாம். எறுழ் என்னும் உரியொடு எறும்பு, எறும்பி (யானை) என்பவற்றை எண்ணினால் வலிமை விளக்கமாம்.

66

"எறுழ் வலியாகும்

என்பது நூற்பா (871).

கலியாணர்

உண்ணாட்டு வாணிகரன்றி அயல் நாட்டு வாணிகராகப் பெரும் பொருள் ஈண்டியவர் கலியாணர் எனப்பட்டனர். கலி=மிகுதி; யாணர் = வருவாயினர்.

யாணர் என்பதன் பொருள் புதிதுபடல் (புதிய வளம் பெறுதல்) என்பார் தொல்காப்பியர் (862) யாணர் என்பதை யன்றி ‘யாண்' என்னும் உரிச் சொல்லைக் காட்டி,

"யாணுக் கவினாம்

என்றும் கூறுவார் (864).

புதுவருவாயும் கவினும் பெருக்குவதாய திருமணம் ‘கலியாணம்’ எனவும் வழங்கப்படுதல் விளக்கமாக வில்லையா? வேற்றுச் சொல்லென மயங்காதீர் என்கிறது உரிச் சொற் பொருள்.