இணைச்சொல் அகராதி
15
அதரப்பதற
அதரல்
பதறல்
―
―
நடுக்கமுறல்
நாடி, துடி மிகல்.
அதிர்வு-நடுக்கம்; அச்சம் உண்டாய போது உடல் நடுக்கமும் உள நடுக்கமும் ஒருங்கே உண்டாம். உளநடுக்கத்தால் உரைநடுக்கமும் மேலெழும். கட்புலனாகும் உடல்நடுக்கம் அதரல் எனவும், கட்புலனாகாத நாடித் துடிப்பு மிகுதலும், உரைப்பதற்றமும் பதறல் எனவும் சுட்டப் பெற்றனவாம். ஒடுங்கிய உடம்பு, நடுங்கிய நிலை, மலங்கிய கண், கலங்கிய மனம், மறைந்துவருதல், கையெதிர் மறுத்தல் என்பவை அச்சமுற்றோர்க்கு உளவாதலைச் சிலம்பு சொல்லும்.
அந்திசந்தி
அந்தி
சந்தி
ம
―
மாலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது.
காலைக்கும் இரவுக்கும் இடைப்படுபொழுது. மாலைக்கடை அந்திக்கடை எனப்படும். சில ஊர்களில் அந்திக்கடைத் தெரு, அந்திக்கடைப் பொட்டல் என்னும் பெயர்கள் தம் பழமையைச் சொல்லிக் கொண்டு இன்றும் உள்ளன. அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை என்பது சிலம்பில் ஒரு காதை. இரவுக்கடை அல்லங்காடி என்பதும் பகற்கடை எல்லங்காடி என்பதும் சிலப்பதிகார ஆட்சி. இந்நாளில் புதிய புதிய மாலைக் கடைகளும் இரவுக்கடைகளும் பெருகுகின்றன. ஆனால் தமிழில் பெயர் இருந்தால் தலையே போய்விடும் என்பது போல ஆங்கில மயக்கத்தில் குலவுகின்றன. தமிழால் வாழும் தமிழனுக்கும் தமிழ்பற்று இல்லை என்றால், நன்றியில்லாப் பிறப்பாளர் என்பதற்கு நாக்கூச வேண்டுவதில்லையாம். சந்தி, முச்சந்தி, நாற்சந்தி சந்திப்பதால் வந்தது போல, இரவும் பகலும் சந்திப்பதால் வந்த பெயர். சிலர் காலையையும் ‘அந்தி' என்பர். ‘அதற்கு வெள்ளந்தி’ என்பது பயர் காலை நியமம் ‘சந்தியாவந்தனம்' எனப்படுதல் அறிக.
அப்புறக்குப்புற
அப்புற(ம்) முகம் மேல் நோக்கி இருத்தல்
குப்புற(ம்) முகம் கீழ்நோக்கி இருத்தல்.