உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

குழந்தையை மல்லாக்கப் படுக்கப் போட்டால் உடனே

புரண்டு குப்புறப் படுத்துக்கொள்வதுண்டு.

அதனை

அப்பறக்குப்பற' விழுகிறது என்பர். அப்பக்கம் என்னும் பொருள் தரும் அப்புறம் என்னும் சொல் ‘குப்புறம்' என்னும் இணைவால் மேல் பக்கம் (மல்லாக்க) என்னும் பொருள் தந்தது. குப்புறப் படுத்துக் கிடத்தலை முகங்கீழாகக் கிடத்தல் என்றும், அதோ முகமாய்க் கிடத்தல் என்றும் கூறுவர்.

அரக்கப்பரக்கவிழித்தல்

அரக்கல் பரக்கல்

முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல்.

சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல்.

குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும் முகம் முதலியவற்றைத் தேய்த்தலையும் ‘திருதிரு' வென அங்கும் இங்கும் மருண்டும் வெருண்டும் பார்த்தலையும் கண்டு அரக்கப்பரக்க' விழிப்பதாகச் சொல்லுவர். அறியாப் புதிய இடத்தில் திகைப்போடு இருப்பவனையும் ‘அரக்கப் பரக்க’ விழிப்பதாகச் சொல்லுவர்.

அரிப்பும் பறிப்பும்

அரிப்பு பறிப்பு

66

சிறிது சிறிதாகச் சுரண்டுதல்.

முழுமையாகப் பறித்துக் கொள்ளுதல்.

அரித்துச் சேர்த்ததை எல்லாம் பறித்துக் கொண்டு போய் விட்டான் என ‘அரிப்புப் பறிப்புக்' கொடுமைகளைப் பழிப்பர்.

சிறுகச் சிறுகச் சுரண்டியதை மொத்தமாகப் பறித்துக் கொண்டு விட்டான். இதற்கு இது தக்கதே என்பது போன்ற கருத்தில் இருந்து வந்தது’ 'அரிப்புப் பறிப்பு' ஆகும்.

கறையான் அரித்தலையும், வழிப்பறியையும் கருதுக.

அரியாடும் கரியாடும்

அரியாடு செந்நிற ஆடு

கரியாடு

கருநிற ஆடு.

அரியாடு செம்மறியாடு கரியாட்டை வெள்ளையாடு

எனப்படும். காராடு

ஆகிய

-

வெள்ளாடு என்பர். அதனை