இணைச்சொல் அகராதி
17
மங்கல வழக்கு என இலக்கண நூலார் கூறுவர். அரி சிவப்பாதல், ‘செவ்வரி' என்பதாலும் அறிக.
தனித்தனியியல்
செம்மறியாடும் வெள்ளையாடும் புடையவை. கூடி நடக்கவோ, மேயவோ செய்யாதவை. தா மே தனித்தனியாகப் பிரிந்து தம் கூட்டத்துடன் கூடிக்கொள்ளக் கூடியவை. ஆகவே இவற்றின் இயல்பை யறிந்தோர் இணையத் தகாத இருவர் இணையக் காணின் அரியாடும் கரியாடும் போல
என்பர்.
அருமை பெருமை
அருமை
—
பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை.
பெருமை செல்வம், கல்வி, பதவி
உண்டாகும் செல்வாக்கு.
முதலியவற்றால்
அருமை பெருமை தெரியாதவன்' எனச் சிலர் பழிப்புக்கு ஆளாவர். ஒருவரது அருமை பெருமைகளை அறிந்து நடத்தல் வேண்டும் என்பது உலகோர் எதிர்பார்ப்பாம். ஆனால் ‘அருமை பெருமை' ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையாக அல்லவோ தோன்றுகின்றது.
அரிது என்பதன் வழிவந்தது அருமை. பெரிது என்பதன் வழிவந்தது பெருமை.
அரைகுலையத் தலைகுலைய
ப
அரைகுலைதல் இடுப்பில் உடுத்திய உடை நிலை கெடுதல் தலைகுலைதல் முடித்த குடுமியும் கூந்தலும் நிலை கெடுதல்.
விரைந்து ஓடி வருவார் நிலை அரைகுலையத் தலை குலையக்' காட்சி யளிப்பதுண்டு. போரில் பின்னிட்டு வருவார், அஞ்சி அலறியடித்து வருவார் நிலையும் இத்தகையவே.
66
‘அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து” என்று ஈடு சொல்லும் 3. 5 .1.
அரைகுறை
அரை
குறை
ஒரு பொருளில் சரிபாதியளவினது அரை.
- அவ்வரையளவில் குறைவானது குறை.