உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

அரை குறை வேலை; அரை குறைச் சாப்பாடு என்பவை வழக்கில் உள்ளவை. இனி ‘அறை குறை' என்பதோ வேறு.

‘அறை’ அறுக்கப்பட்டது. அதில் சரிபாதி என்னும் அளவு இல்லை.

‘குறை’ அறுக்கப்பட்டதை அறுத்துக் குறைபட்டது. அல்லாடுதல் மல்லாடுதல்

அல்லாடுதல்- அடிபட்டுக் கீழே விழுதல்

மல்லாடுதல் - அடிபோடுவதற்கு மேலேவிழுதல்

சண்டையில் கீழே விழுந்தும் மேலே எழுந்தும், தாக்குண்டும் தாக்கியும் போரிடுவாரை அல்லாட்டமும், மல்லாட்டமும் போடுவதாகக் கூறுவர். இனி, வறுமையில் தத்தளித்தும், ஒருவாறு வறுமையை முனைந்து வென்றும்மீண்டும் வறுமையும் சமாளிப்புமாக வாழ்பவரை அவர்பாடு எப்போதும் ‘அல்லாட்ட மல்லாட்டந் தான்' என்பர். போர்த் தத்தளிப்பு வறுமைத் தத்தளிப்புக்கு ஆ வந்ததாம். வெல்லவும் முடியாமல் தோற்கவும் இல்லாமல் திண்டாடும் இரு நிலையையும் விளக்கும் இணைச் சொல் இது. அல்லுச்சில்லு

அல்லு

சில்லு

66

அல்லலைத் தரும் பெருங்கடன்.

சிறிது சிறிதாக வாங்கிய சில்லறைக் கடன்.

‘அல்லுச் சில்லு இல்லாமல் கணக்கைத் தீர்த்துவிட்டேன்” என்று மகிழ்வுடன் கூறுபவர் உரையைக் கேட்கும்போது அவர்கள் அல்லுச்சில்லால் பட்ட துயரம் தெரியவரும்.

சில்லு என்பது சிறியது; சில்லி, சில்லுக் கருப்புக்கட்டி, தேங்காய்ச் சில்லு என்பவனற்றால் சில்லுக்குச் சிறுமைப் பொருள் உண்மை அறியலாம். இனி, அல்லு அல்லலையும் சில்லு சிறுமையையும் தருவதாகவும் அமைகிறது. அவனுக்கு அல்லுச் சில்லு எதுவும் இல்லை; அமைதியான வாழ்வு என்னும் பாராட்டால் இது விளங்கும்.

அலுங்காமல் நலுங்காமல்

அலுங்காமல்

நலுங்காமல்

அசையாமல்

ஆடாமல்