இணைச்சொல் அகராதி ♡
19
அலுங்குதல் நிகழ்ந்த பின்னே, நலுங்குதல் நிகழும். தட்டான்கல் அல்லது சொட்டான்கல் ஆட்டத்தில் ஒரு கல்லை எடுக்கும் போது விரல் இன்னொரு கல்லில்பட்டு அலுங்கி விட்டால் ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டுமென விதியுண்டு. நலுங்குதல். இடம் பெயரும் அளவு ஆடுதலாம். ஆடுதலாம். இனி, அலுங்காமல் குலுங்காமல் நடப்பாள்' என்பதில் குலுங்குதல் நலுங்குதல் பொருள் தருவதேயாம். குலுங்கிக் குலுங்கி அழுதல் என்பதிலும், குலுக்குதல் என்பதிலும் குலுங்குதலுக்கு ஆடுதல் பொருள் உண்மை அறிய வரும்.
அலுப்பும் சலிப்பும்
அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும்.
சலிப்பு - உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும்.
அலங்குதல், அலுங்குதல் - அசைதல்; இடையீடு இல்லாமல் உழைப்பவர் அலுப்படையவர். அலுப்பு மருந்தென ஒரு மருந்தும் பல சரக்குக் கடைகளில் உண்டு. முன்னே அலுப்புக்குக் 'கழாயம்’ (கசாயம்) கொடுப்பர்; இப்பொழுது குடியே அலுப்பு மருந்தாய்க் குடிகெடுத்து வருகின்றது.
சலித்தல்-துளைத்தல்; சல்லடை அறிக. உள்ளத்தைத் துளைக்கும் துளைப்பே சலிப்பாம். மனத்திண்மையை 'இறையும் சலியா வலிமை' என்பார் கம்பர் (உயுத்த1733)
அலை கொலை
அலை
கொலை
அலைத்தலாம் துன்புறுத்துதல்
கொல்லுதல்
இனிப் புலை கொலை என்பது புலால் உண்ணுதலையும், கொலை என்பது கொல்லுதலையும் குறிக்கும். அலையாவது அலை கிளர்வது போல் அடுத்தடுத்தும் துயர்பல செய்வதாம். "அலை மேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து' என்பது திருக்குறள் 551.
66
அலைப்பு, அலைச்சல் முதலிய சொற்களால் அலையின் பொருள் விளங்கும். 'கொல்லான் கொலைபுரியான்' என்னும்