20
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
ஏலாதித் தொடர், கொல்லாதவனையும், கொன்று தந்த ஊனை விரும்பாதனையும் குறிக்கும்.
அழுதுஅரற்றுதல்
அழுதல்
அரற்றுதல்
கண்ணீர் விட்டு கலங்குதல்
வாய் விட்டுப் புலம்புதல்.
அழுது வடிதல், அழுது வழிதல் என்பவை வழக்கு. அழுகைக் கண்ணீர் என்பார் அருஞ்சொல் உரையாசிரியர் (சிலப்.5.237-9)
66
‘அல்லல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை என்பது திருக்குறள்.
அரற்றுதல், என்பதற்கு அலறுதல், புலம்பல், ஒலித்தல், ஓலமிடல், பலவும் சொல்லித் தன்குறை கூறல் என்னும் பொருள்கள் உண்டு. “காதல் கைம்மிகக் கனவின் அரற்றலைச்” சுட்டுவார் தொல்காப்பியர். அரற்று என்பதற்கு ‘வாய்ச் சோர்வு' என்பார் இளம்பூரணர் (பொருள்.256). இக்காலத்தில் வாய்வெருவல், வாய்விடல் என அரற்று வழங்குகின்றது.
66
‘அழுது வாய் குழறி” என அழுது அரற்று தலைச் சுட்டுவார் கம்பர். (ஆர.41).
அள்ளக்கொள்ள
அள்ள
கொள்ள
- பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு.
கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு.
“அள்ளக் கொள்ள ஆள் வேண்டும்” என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர் .மழை போலும் நெருக்கடியான வேளையானால் ஒருவர்க்கு ஒருவர் கூப்பிடாமலே கூடிவந்து அள்ளக்கொள்ள முந்துவர்.
அள்ளிக்குவித்தல், களத்து வேலை; கொள்ளுதல் சேர்த்தல், களஞ்சியத்து வேலை.
அள்ளி முள்ளி
அள்ளுதல் கை கொள்ளுமளவு எடுத்தல்
முள்ளுதல்
விரல் நுனிபட அதனளவு எடுத்தல்.