உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைச்சொல் அகராதி ♡

21

தருதல் வகையுள் அள்ளித் தருதலும், முள்ளித் தருதலும் உண்டு. தருவார் மனநிலையும், கொள்வார்க்கும் கொடுப் பார்க்கும் உள்ள நேர்வும் அள்ளித் தருதலாலும் முள்ளித் தருதலாலும் விளங்கும்.

ஏதோ கொடுக்க வேண்டுமே என்னும் கடனுக்காக, அள்ளித் தருதலாலும் முள்ளித் தந்து ஒப்பேற்றி விடுவதும் கண்கூடு.

அள்ளிமுள்ளித் தின்னுதல் என்பதும் வழக்கு. அள்ளித் தின்னல் சோறு; முள்ளித் தின்னல் கறி வகைகளும் தீனிவகை களுமாம்.

அற்றதுஅலைந்தது

அற்றது – எவர் துணையும் அற்றவர்.

அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர்.

66

அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடு தானா கிடைத்தது” எனச் சலித்துக் கொள்ளுவார் உளர். அவர் ‘அற்றவர் அலைந்தவர்' என்று கூறுவதையும் விரும்பாராய் அஃறிணையால் குறிப்பர். தம் வறுமையாலும் செய்து செய்து சலித்தலாலும், மனமின்மையாலும் வரும் பழிப்புரை ஈதாம். அற்றார்க்கு ஒன்று ஆற்றுதலும், புகலற்று அலைவார்க்கு உதவுதலும் அறம் என்பது அறநூற் கொள்கை.

அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

அற்றைப்பட்டினி - ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல்

அரைப்பட்டினி

ஒவ்வொரு

வேளையும் வயிறார உண்ண

வழியின்றி அரைவயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல்.

6

அற்றைப் பட்டினி பொழுது மறுத் துண்ணல்' என நற்றிணையில் சொல்லப்படும். ஒரு வேளையுண்டு ஒரு வேளை யுண்ணாத வயிற்றை, ஆற்றில் மேடு பள்ளமாய்ப் படிந்துள்ள மணல் வரிக்கு உவமையாகச் சொல்கிறது அது. வயிற்று மேடு பள்ளம், மணல் மேடு பள்ளம் போலக் காட்டப்படுகிறது. உண்ட வயிறு மேடு; உண்ணாத வயிறு பள்ளம். பட்டுணி-பட்டினி.