உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

3

பொருளுக்கு வரி வாங்குவதுபோல வரி வாங்க ஆள்பவர்கள் நினைத்தாலும் கொள்ள முடியாதது கல்வி!

எந்தச் செல்வத்தை அள்ளிக் கொடுத்தாலும் கொடுத்தவரிடத்து அப்பொருள் குறையவே செய்யும். ஆனால், கல்விச் செல்வம் மட்டுமே கொடுத்தவர்க்குக் குறையாதது மட்டுமன்றி மேலும் பெருகவும் செய்யும்.

“கள்வர் பெரியரா? காப்பார் பெரியரா?” என்பது பழமொழி. எவ்வளவு கட்டுக்காவல் இருந்தாலும் அவற்றைக்கடந்து களவாடிக் கொண்டுபோகக் கூடியவர்களும் உலகில் உளர். எத்தகைய திறமான களவாளர்களையும் கையும் களவுமாகப் பிடித்துவிடக் கூடிய காவல் தேர்ச்சியாளர்களும் உளர். ஆனால், எத்தகைய கள்வர்களாலும் களவாட முடியாதது கல்விச் செல்வம். எத்தகையவர்களாலும் எளிதாகக் காக்கக் கூடியது கல்விச் செல்வம். ஆம்! கள்வர்க்கு மிக அரியது; காப்பவர்க்கு மிக எளியது.

க்கருத்துக்களை ஒருங்கே விளக்குகின்றது ஒரு பாட்டு.

அது வருமாறு:

"வெள்ளத்தே போகாது வெந்தழலால்

வேகாது வேந்த ராலும்

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவொழியக் குறைப டாது

கள்ளர்க்கோ மிகஅரிது காவலோ

மிகஎளிது கல்வி என்னும்

உள்ளத்தே பொருளிருக்க உலகெல்லாம்

பொருள்தேடி உழல்வ தேனோ”

நாடாளும் காவலன்

ஒருவன் புகழும், அவன் நாட்டெல்லையளவில் அமையும். ஆனால், ஏடாளும் நாவலன் புகழோ நாட்டெல்லை கடந்து உலகெல்லையாக விரியும்! பொருட்செல்வத்தினும் கல்விச் செல்வம் சீரியது என்பதை வெளிப்படுத்துமல்லவா!

து

நாடாள்பவனாக இருப்பவன், வயதால் முதிர்ந்த ஒருவனை அழைத்து நல்லுரை கேட்பது இல்லை; கல்வியால் சிறந்த ஒருவனையே கனிந்து வரவேற்று அவன் காட்டும் வழியில்