உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

செல்வான். ஆதலால், ஆண்டு முதுமையினும் அறிவின் முதிர்வே மதிக்கப்படும் என்பதும் வெளிப்படும்.

இத்தகையவற்றை எல்லாம் நன்கு அறிந்ததால் தான் ஆட்சிச் செல்வமும் அறிவுச் செல்வமும் ஒருங்கே கொண்டு விளங்கிய அதிவீரராம பாண்டியன்,

"கற்கை நன்றே கற்கை நன்றே

என்றும்,

66

பிச்சை புகினும் கற்கை நன்றே”

"அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்'

என்றும் கூறினான். அவனே கல்வி யறிவில்லாத ஒருவனைப் பெறுவதினும் அவன் பெற்றோர்க்குப் பிள்ளைப் பேறே வாய்க்காது போயிருந்தால்கூடப் பெருமையாம் என்றும் இடித்துக் கூறினான்! கல்விச் செல்வத்தைப் பெறாதவனை எவ்வளவு வெறுத்தான் அவ்வேந்தன் என்பது இதனால் நன்கு விளங்கும்; அன்றியும் கல்விச் செல்வத்தின் சிறப்பும் விளங்காமல் போகாது.