உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

5

2. கல்வியே கண்கள்

எண்சான் உடல் உடை யவன் மனிதன். அவன் எண்சாண் உடலுக்கு முதன்மை வாய்ந்தது ஒருசாண் அளவுள்ள தலை. அவ்வொரு சாண் தலையிலும் ஒரு விரல் அளவுடைய கண்களே மிக முதன்மையானவை. ஆதலால்தான் கல்வியின் சிறப்பினைக் காட்ட வந்த சான்றோர்கள் அதனைக் கண்களுக்கு உவமையாகக் கூறினர்.

“எண்ணும் எழுத்தும் கணணெனத் தகும்”

என்பது ஔவையார் மொழி.

66

'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்பது திருவள்ளுவர் திருவாக்கு.

66

'கற்றறி வில்லா மாந்தர்

கண்கெட்ட மாடே யாவர்’

என்பது பிற்காலப் புலவர் ஒருவர் வாக்கு.

கண்போன்றது கல்வி! ஆயினும், கண்ணினும் சிறப்புடையது! கண்காணாத இடத்தையும், காண முடியாத ஒன்றையும் காணும் அகக்கண் கல்வியாகும். அதனால், ‘உள்ளொளி' என்றும், ஞானக்கண்' என்றும் கூறினர்.

கற்றவன் கண்களே கண்கள்! மற்றவர் கண்கள் கண்களல்ல! புண்கள்! ஏன்?

கற்றவர் அகக்கண் உடையவரல்லவா! அகக்கண் என்பது அருட்கண் ஆகும்! அக்கண் பிறவுயிர்க்குத் துன்பம் தராது; துன்பப்படும் ஓருயிரைப் பார்க்கப் பொறுக்காது. தான்பட்ட துயர்போலத் துடிக்கும். அத் துடிப்பு ஏற்படா விட்டால் கண்ணில் இருந்து இரக்கக் கண்ணீர் வழியாது; நெஞ்சம் நெகிழாது; உதவுவதற்கு உடல் ஓடி ஆடாது! அகக்கண் பெறாத புறக்கண்ணால் ஆகும் பயன் என்ன?