உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

ஓர் உயிர் படும் துயரைக் கண்டு அருட் கண் ணாகிய அகக்கண்ணுடைய உயிர் ஒன்றே கண்ணீர் வடிக்குமே ஒழியக், கண்ணாடி நீர் வடிக்குமா? கண்ணீர் வடிக்காத கண்ணுக்கும் கண்ணாடிக்கும், எத்தகைய வேற்றுமையும் இல்லை. ஆதலால், கல்விக் கண்ணின் சிறப்பு நன்கு புலனாகும். கண்ணின் இயல்பு கொள்ளாத கண், கண்ணாகுமா? புண் என்பதால் குற்றம்

உண்டா?

புண் என்ன செய்யும்? உடலுக்கும் வலியைத் தரும்; உள்ளத்திற்கும் வலியைத் தரும்! அதே வலியைத் தரும் கண்ணை அதனினும் உயிருக்கும் கேடு தரும் கண்ணைப் புண்ணென்று கூறுவதால் குற்றமில்லை.

கல்லாத ஒருவனிடம் ஒரு கடிதத்தைத் தந்தால் என்ன செய்வான்? “நான் குருடன்; என்ன எழுதி யிருக்கிறது என்பது தெரியாது" என்பான். அவ் வாறானால் கல்விக்கண் என்பதை அவன் அறிந்திருக்கத்தானே செய்கின்றான்.

இன்னும் ஒருவகையாலும் அறியலாம். அந்தகக் கவி வீரராகவர் என்றொரு புலவர் இருந்தார். அவர் தம் நெஞ்சினையே ஏடாகக் கொண்டு படித்தவர்."ஏடாயிரங்கோடி எழுதாது தன் மனத்து எழுதிப் படித்த விரகன்” என்று தம்மை அவரே கூறுகின்றார். அவர் எண்ணற்ற பாடல்கள் பாடினார். இலங்கை நாட்டுக்கும் சென்று அந்நாளில் அங்கு ஆட்சி செலுத்திய பரராசசிங்கன் என்னும் அரசனையும் பாடினார்.

கண்ணொளி இழந்த புலவர் வீரராகவரைக் காண மன்னன் பரராசன் முதலாவது விரும்பவில்லை. மன்னர்களிடம் பார்வை இலாதவரைப் பார்க்கக் கூடாது என ஒரு வழக்கம் இருந்தது. ஆனாலும், வீர ராகவர் திறமையை அறிந்து அவரை அவைக்கு அழைக்க இசைந்தான். அவர் அரண்மனைக்குள் வரும் போது அவர் திறமையை ஆராய விரும்பி, வில்லை எடுத்துக் கொண்டு நின்றான் வேந்தன்.

"இலங்கைக் கோமானாம் இராவணன் இல்லை; ஏழு மராமரங்களும் இல்லை; மாரீசனாகிய மானும் இல்லை; அவ்வாறாகவும் நீ வில்லை எடுத்துக் கொண்டு நிற்பது எதற்காக? எமக்குக் கூறுவாயாக” என்னும் பொருளமைய ஒரு பாடலைப் பாடினார்!