உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

அரசன் வியப்பும் திகைப்பும் அடைந்தான்.

7

கண்ணொளி அற்ற அப்புலவர் எப்படி இத் திறமை

பெற்றார்?

எண்ணும் எழுத்தும் கண்களாக இருந்தன; ஒளியூட்டின; அதனால், உயர்ந்த அறிவுத் திறம் பெற்றுச் சிறந்தனர்.

அந்தகக்கவி வீரராகவர் மட்டுமா சான்றாக இருந்தார்?

மாம்பழக்கவிச் சிங்க நாவலர் என்பவர் கண்ணொளி இழந்தவர்! இரட்டைப் புலவர்களுள் ஒருவரும் கண்ணொளி இல்லாதவர்! இவர்களை யெல்லாம் வெற்றி கொள்ளும் திறம் பெற்றவர் கெலன் கெல்லர் அம்மையார்! அவர்க்குக் கண்ணொளி

இல்லை; காது கேளாது; வாய் பேசார்! ஆனாலும், அவ்வம்மையார் உலகப் பேரறிஞர்களுள்

திகழ்ந்தார் என்பது எவ்வளவு வியப்பான செய்தி!

ஒருவராகத்

அகக்கண்ணால் பார்க்கும் திறம் வாய்த்தவர்களுக்கு முகக்கண்ணால் பார்க்க முடியாமல் போனால் என்ன குறைந்து போகும்? இதனால், அல்லவா,

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்.”

என்றார் திருமூலர்! அகக்கண் திறக்கும் கல்வியின் சிறப்புக்கு அளவும் உண்டோ?