உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

3. கல்வி

கல்வி என்பது கல்லிப் பெறுவது என்பதாம். கல்லுதல் என்பது தோண்டுதலாகும். ஊற்றைத் தோண்டி நீரைப் பெறுவதுபோல், பாறையைத் தோண்டித் தங்கப் பாளத்தைப் பெறுவதுபோல், அரிதில் அகழ்ந்து தேடி வயிர மணியைக் காண்பது போல் ஆய்ந்து அறிந்து தேடிக் கொள்வதே கல்வி யாகும்.

கல்லுதல் தோண்டுதல் என்னும் பொருள் தருமா? தரும். "கொழுங் கொடியில் விழுந்த வள்ளிக் கிழங்கு கல்லி எடுப்போம்” என்பது குற்றாலக் குறவஞ்சி. “மலையைக் கல்லி எலியைப் பிடித்தல்” என்பது பழ மொழி. இவற்றால் கல்லுதல் என்பதற்குத் தோண்டுதல் என்னும் பொருள் உண்மை புலப்படும்.

இதே தோண்டுதல் பொருளில் உவமையால் கல்வியை விளக்குகின்றார் திருவள்ளுவர்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு”

என்பது அவர் வாக்கு.

66

மணலைத் தோண்டிய அளவிற்கே ஊற்றில் நீர் ஊறும். அதுபோல் முயன்று கற்ற அளவுக்கே முதிர்ந்த அறிவு உண்டாகும்” என்பது இதன் பொருள்.

நீர் எங்கே இருக்கிறது? ஊற்றிலேயே இருக்கிறது. நீர் ஏன் வெளிப்படவில்லை? மணல் மூடிக் கிடப்பதால் ஊற்றில் நீர் வெளிப்பட வில்லை; மணலைத் தோண்டியபின் மறைந்திருந்த ஊற்று வெளிப்பட்டது. ஊற்று நீர்க்குப் பொருந்திய இத்தன்மை கல்வி அறிவுக்கும் பொருந்த வேண்டுமல்லவா?

அறிவு ஒவ்வொருவர் மூளையிலும் பதிந்து கிடக்கவே செய்கிறது. ஆனால், மாயை என்னும் திரை அவ்வறிவு