உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

அறிவு நுண்ணியது; விரிந்தது; ஆழமானது! அறிவின் முத்தன்மைகள் இவை. இவற்றை, “நுண் மாண் நுழைபுலம்” என்றார் திருவள்ளுவர்.

ஆண்டவனும் இம் முத்தன்மைகளைக் கொண்டவன் என்பது ஆளுடைய அடிகள் வாக்கு. இறைவனை, “ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே” என்றுபாடு கின்றார் அவர்.

அறிவின் இலக்கணமும் ஆண்டவன் வன் இலக்கணமும் ஒன்றானால், ‘அறிவே கடவுள்' என்பது பொருள் பொதிந்த மொழியல்லவா! கல்வியைக் கடவுள் ஆக்கிய கோலந்தானே “கலைமகள்!” இறைவனுக்கும் மறை யோதிய திருக்கோலந் தானே குருபரன்! கல்விக்கும் கடவுளுக்கும் தொடர்பு ருப்பதால் தானே,

66

“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’

என்றார் திருவள்ளுவர்.