உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

11

4. எத்தகைய நூலைக் கற்க வேண்டும்?

உன் நண்பன் யாவன் என்று சொல்; உன் தன்மை இன்ன தென்று சொல்லி விடுகின்றேன்” என்பது ஒரு பழமொழியின் பொருள். இதைப் போலவே சொல்லலாம், “நீ படிக்கும் நூல் எதுவென்று கூறு; உன் தன்மை இன்னதென்று சொல்லி விடுகின்றேன்” என்று! இதனால், ஒருவன் கற்கும் நூல் அவன் மனப்பான்மையை வெளிப்படுத்தும் என்பது தெளிவாம்.

நூல் என்பது என்ன?

ஒரு மரத்தை நேராக அறுக்க வேண்டும்; ஒரு கல்லைச் செம்மையாக உடைக்க வேண்டும்; ஓரிடத்தைச் சரியான அளவில் தோண்ட வேண்டும்; ஒரு சுவரை ஒழுங்காக வைக்க வேண்டும்- இத்தகைய வேலைகளுக்கு எதைப் பயன்படுத்துகின்றனர்?

காவியோ, கரியோ, சுண்ணாம்போ குழைத்து நூலில் தோய்த்து நேராக வரி அடிக்கின்றனர்; இரு முளைகள் நட்டு நூலைக் கட்டுகின்றனர்; தூக்குக் குண்டுகளைப் பயன்படுத்து கின்றனர்; பஞ்சு நூல் மரத்தையும், கல்லையும் மற்றவற்றையும் நேராக்கப் பயன்படுகின்றது.செம்மையாக்கப் பயன்படுகின்றது. ஆதலால், ஒருவன் மனத்தைச் செம்மைப்படுத்துவது எது வோ அதுவே உண்மையான நூலாகும்; மற்றவை நூலென்று கருதப் பெற மாட்டா.

சந்தையில் போய்க் காய்களை வாங்குகிறோம்; கண்ட கண்டகாய்களையெல்லாம் வாங்கி வந்து விடுகின்றோமா? நல்ல காய்களாக நம் உடல் நலத்திற்கு ஏற்ற காய்களாக வாடிவதங்கிக் கெட்டுப் போகாதனவாகப் பார்த்தே வாங்குகின்றோம். பழம் வாங்கினாலும் இப்படியே பார்த்து வாங்குகின்றோம்.

விதைப்பதற்கு விதை தேர்ந்தெடுத்தலிலும் நல்ல பொறுக்கு மணியான விதையையே தேர்ந்தெடுக்கின்றோம். இவற்றைப் போலவே உயிர்க்கு நலம் பயக்கும் நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்றல் இன்றியமையாததாகும். இதனால்தான் ‘கற்க’ என்று