உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

கூறிய திருவள்ளுவர், 'கசடறக் கற்க' என்றார். ‘கசடறக் கற்க என்று கூறிய திருவள்ளுவர், ‘கற்பவை கசடறக் கற்க’ என்று தெளிவாக விளக்கிக் கூறினார். ஆதலால், கற்கத் தக்க நூல் களையே நாம் கற்றல் வேண்டும்.

நாம் கற்கத் தக்கவை எனத் தேர்ந்தெடுக்கும் நூல்களை மூன்று வகைப்படுத்தலாம். அவை பண்படுத்தும் நூல்கள், அறிவூட்டும் நூல்கள், இன்புறுத்தும் நூல்கள் என்பன.

ஒரு நிலத்தில் விதையைப்போடு முன்னரோ நடு முன்னரோ அதனைப் பண்படுத்தி வைத்திருப்பர். பண்படுத்தப்படாத நிலத்தில் விதைக்கப் பெற்ற விதைகள் முளைக்கா; முளைத்தாலும் வளமுற வளரா; வளர்ந் தாலும் பயன்தரா. ஆகவே, நிலம் பயன் தரவேண்டுமானால் அதனைப் பண்படுத்துதல் இன்றியமை யாதது. அதுபோல் வாழ்வு பயன்பட வேண்டுமானால் அது பண்பட்டதாக அமைதல் வேண்டும். அவ்வாறு பண் படுத்துவதற்கு ஏற்ற நூல்கள், அறநெறி நூல்கள், இலக்கிய நூல்கள், சான்றோர் வரலாற்று நூல்கள் என்பவையாம்.

நமக்கு முன்னே வாழ்ந்த பெருமக்கள் தம் பட்டறிவாலும், படிப்பறிவாலும் கண்டறிந்த கருத்துக் கரு வூலங்களே அறநெறி நூல்களும், இலக்கிய நூல்களுமாகும். அவர்கள் வாழ்ந்து காட்டி அவர்கள் வழியில் நம்மை இட்டுச் செல்லுதற்கு அமைந்த நூல்களே வரலாற்று நூல்கள். ஆகலின், இவை நம்மைப் பண் படுத்திப் பிறவிப் பயனை நாம் அடைவதற்கு வழி செய்வன. நாம் அறியாமலே நம்மை வயப்படுத்தி ஆட்கொண்டு மேல் நிலைக்குத் தூக்கிச் செல்வன. ஆதலால், அத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்றல் நன்றாம்.

·

ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டு இருக்கின்றாரோ, அந்தத் துறையில் மேலும் மேலும் அறிவை வளர்த்துத் திறம் பெறுவதற்காகக் கற்கும் நூல்கள் அறிவு நூல்கள் ஆகும். கணக்கில் ஈடுபாடுடைய ஒருவர் கணக்குத் துறையில் புதிது புதிதாக வெளிவரும் நூல்களையும் கட்டுரைகளையும் கற்றல் வேண்டும். அவ்வாறு கற்பது அத்துறையில் அவரை மேம்பாடு அடையச் செய்யும். அவர் அத்துறையை மேம்படுத்தி வளர்ப்ப தற்கும் துணை செய்யும். இவ்வாறே வரலாறு, அறிவியல் முதலிய துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவ்வத்துறை நூல் களைக் கற்றால் நலம் பெருகும்.