உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

5. எப்படிக் கற்க வேண்டும்?

எத்தகைய நூல்களைக்கற்க வேண்டும் என்பதை அறிந்தோம். அவற்றை எப்படிக்கற்க வேண்டும் என்பதையும் அறிய வேண்டும்.

நீர் வேட்கை மிகுந்தபோது நீர் பருகுவதற்கு ஆவலுறுவது போலவும், பசி வாட்டும் போது உண்ணு வதற்கு ஆவலுறுவது போலவும், கோடை வெயில் கொடுமையாக வாட்டும் போது குளிர் நிழலை விரும்புவது போலவும் கற்பதில் ஆர்வம் செலுத்துதல் வேண்டும். விரும்பிச் செய்வதாயின் எத்தகைய கடினமான செயலும் எளிதானதாகும். விருப்பில்லா மல் செய்யும் எந்த எளிய செயலும் கூட மிகக் கடினமானதாகிவிடும்! விளையாட்டு, படக்காட்சி இவற்றில் உள்ள ஈடுபாடு கல்வியிலும் ஏற்பட வேண்டும். ஏற்பட்டு ட்டால் மிக இனிய நிலையில் நிறைந்த திறமை பெற்று விடலாம்.

“புல்லைக் காட்டிக்கொண்டு போனால் அவனைப் பின்பற்றியோடும் மாட்டைப்போல நல்லறிவைத் தேடி நான் ஓடுகின்றேன்” என்று சொல்லும் அறிஞர் சாக்கரடீசு உரையில் அவர் அறிவு ஆவல் புலப்படவில்லையா?

66

"என்னை நடுத்தெருவில் நிறுத்தி வாரந் தோறும் நாற்பது கசையடிகள் தரப்பெறும்; அதனைப் பெற்றால் தான் நீ படிக்க அனுமதிக்கப்படுவாய் எனும் கட்டளையிட்டால்கூடகசையடிக்கு அஞ்சிக் கற்பதை விடமாட்டேன்”என்றாரே காரல் மார்க்கசு! அவர்மொழியில் கல்வியின் தணியாக் காதல் புலப்பட வில்லையா?

“தேன் படிக்கும் அமுதாம் உன் திருப்பாட்டை நாள் தோறும்,நான் படிக்கும் போதென்னை நானறியேன் நாவொன்றோ, ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர் படிக்கும் உயிர்க்குயிரும், தான் படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே” என்று ஆளுடைய நம்பிகள் அருள் மாலையிலும்,