உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கல்விச் செல்வம்

வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால்

நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து

செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென் ஊன்கலந்து உயிர்கலந்து

உவட்டாமல் இனிப்பதுவே"

15

என்று ஆளுடைய அடிகள் அருள் மாலையிலும் வள்ளலார் பாடிய வாய் மொழிகள் அவர்தம் தெய்வ நூற் காதலைப் புலப்படுத்தவில்லையா? ஆதலால், “ஆர்வமே அரை வெற்றி” என்பதை உணர்ந்து ஆவலோடு கற்பவர் அழுத்தமாகக் கற்று முழுநிறை கல்வி பெற்றவராவார்.

"நீரும் பாலும் கலந்து இருந்தாலும் நீரை விலக்கிப் பாலை மட்டும் பருகுந் திறம் படைத்திருந்தது அன்னம் என்ற பறவை’ என நூல்கள் கூறுகின்றன. கால வெள்ளத்தில் அழிந்துபோன பறவை அது. ஆயினும், கருத்து வெள்ளத்தில் அழியாமல் நிலை பெற்று விட்டது. அதன் இயல்பு கற்க விரும்புவார்க்கு நல்ல எடுத்துக்காட்டாம்.

பதரை விலக்கி மணியைக் கொள்கிறோம்; கரும்பில் சக்கையை ஒதுக்கிச் சாற்றைக்கொள்கிறோம்; நெய்யை வடிகட்டிக் கசடு நீக்கி நறு விதைக் கொள்ளுகிறோம். இவற்றைப் போலவே நாம் கற்கும் நூலில் சாரமானவற்றைக் கொண்டு சாரமற்றவற்றை விலக்கி விடுதல் வேண்டும். வேண்டாதவற்றையெல்லாம் மூளையில் திணித்துக் கொண்டிருந்தால் வேண்டிய செய்திக்கு வாய்ப்புக் குறைந்து போகும். ஒரு பையில் போட வேண்டாப்பொருள்களைப் போட்டுக் கொண்டே வந்தால், போடவேண்டிய பொருளுக்கு இடமில்லாமல் போய்விடுமல்லவா!

காந்தியடிகள் கப்பலில் போய்க் கொண்டிருந்தார். ஓர் ஆங்கில நண்பர் தாம் எழுதிய கட்டுரை ஒன்றை அடிகளிடம் தந்து, “இதில் உள்ள சாரமான செய்தியைத் தாங்கள் கூற வேண்டும்” என்றார். அக்கட்டுரையை வாங்கிப் படித்த அடிகள் பின்னே அந்நண்பரிடம் ஒரு குண்டூசியைத் தந்தார். ஏன் என்பது அந் நண்பருக்குப் புரியவில்லை. “தங்கள் கட்டுரையில் சாரமாக