உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

இருந்தது இக் குண்டூசியே. இதனைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றுபாதுகாத்துவைத்தேன்” என்றார் அடிகள்.சாரம் சாரமற்றது என்பதை அடிகள் எவ்வளவு எளிமையாக விளக்கினார். இதனை நாம் உணர்ந்து கற்க வேண்டும்.

இன்றியமையாத நூல்களைப் பன்முறை கற்றல் வேண்டும். அவ்வாறு கற்றால்தான் மறவா நிலை அமையும். அன்றியும் கற்றறிந்த செய்தியைப் பிறரிடம் கூறுவதும் மனத்தில் அழுத்தமாகப் பதிவதற்கு வாய்ப்பாகும். இதனால்தான் பவணந்தி முனிவர் என்பார், “ஆசிரியரிடம் பன்முறை பாடம் கேட்டால் கூட, கால் பங்கு அறிவே பெறமுடியும்; தன்னைப் போல் பயிலும் மாணவருடன் அப்பாடம் பற்றி உரையாடுதலால் ஒருகால் பங்கு பெறமுடியும். எஞ்சிய அரைப்பங்கும் பிறரிடம் செவ்வையாக எடுத்துரைப்ப தால் தான் அமையும்” என்கிறார். இந்நெறியைக் கற்பார் மேற் கொள்ளுதல் சிறப்பாம்.

கற்கும் நூல்களைப் பொருளுணர்ந்து கற்றல் வேண்டும். பொருளுணராமல் கற்கும் கல்வி உள்ளத்தில் தங்காது; தங்கினாலும் நிலைக்காது. மனப்பாடம் செய்தது போலவே மறந்தும் போய்விடும். நாம் உண்ணும் உணவு நம் உடலோடு சேராமல் அப்படியே வாந்தியாகவோ, கழிச்சலாகவோ போய் விட்டால் அந்த உணவால் பயனுண்டா? உணவு குடலில் அரைக்கப் க்கப் பெற்று அதன் ஊட்டப் பொருள் குருதி யோடு சேர்ந்தால்தானே உடலுக்கும் உயிருக்கும் பயனாகும். அவ்வாறு பயன் செய்யாத உணவால் நன்மை யில்லாதது போலத் தன் உள்ளத்தோடு தங்காத - நம் உடைமைப் பொருள் ஆகாத - கல்வியாலும் பயனில்லை. இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு கற்பவர் நலமெய்துதல் உறுதியாம்.