உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

17

6. அறிவின் பயன்

கண்ணால் கண்டு அறிகிறோம்;

காதால் கேட்டு அறிகிறோம்; மூக்கால் முகர்ந்து அறிகிறோம்; நாவால் சுவைத்து அறிகிறோம்; உடலால் உற்று அல்லது தொட்டு அறிகிறோம்; இவை ஐயறிவு எனப்படும். இவற்றின் விஞ்சிய ஓர் அறிவே ஆறாம் அறிவு எனப்படும் பகுத்தறிவாகும். அதை மன அறிவு என்றும் கூறுவர். மனிதர் ஆறாம் அறிவாம் பகுத்தறிவு உடைய வர் என்பது தனிப்பெருஞ் சிறப்பாகும். அதனால் தான், ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்பர்.

66

நல்லது கெட்டது, இனியது இன்னாதது என்பவற்றைப் பகுத்து அறிவது பகுத்தறிவு.செய்யத்தக்கது தகாதது என்பவற்றைப் பகுத்தறிவதும் பகுத்தறிவே. அவ்வறிவு பெறாதவர் மனிதராக இருந்தாலும் மனித ராகக் கருதப் பெறார். அவரை அறிவுக் குறையராக இகழ்வர்.

நாம் ஒன்றைச் சொல்லியபடி ஒருவன் கேட்கவில்லை என்றால் “அறிவு இல்லையா?” என்று சினந்து கேட்கிறோம். நம்மேல் ஒருவன் வந்து மோதிவிட்டால் “அறிவில்லையா?" என்கிறோம். ஏன்? அவன் பகுத்தறிவுடன் செயல் படவில்லை என்ற எண்ணத்தால்தான் அப்படிக் கேட்கிறோம். எத்துணை சொன்னாலும் கேட்காமல் தன் போக்கில் போய்க்கொண்டு இருப்பவனை 'முட்டாள்' என்கிறோம். அவன் தானே முட்டித் தெரிந்து கொள்வானே அன்றிச் சொல்லித் தெரியான்; முட்டியும் பட்டும் தெரிந்தாலும் தெரியான்; அவனே முட்டாள். முட்டாள் என்பதும் பகுத்தறி வற்றவன் என்பதையே குறிக்கும்.

க் குறிப்புக்களால் அறிவின் பயன் என்ன என்பது அறியவரும். உலகம் ஒருவனை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றதோ அப்படி நடப்பதே அறிவின் பயன். அப்படி நடப்பவனே அறிவாளி. இக் கருத்து வள்ளுவனார்க்கும் உடன்பாடேயாகும்.

.