உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

“உலகியல்பு அறிந்து அதற்கேற்ப நடக்கத் தெரியாதவர் அறிவில்லாதவர்” என்றும், “உலகம் எப்படி நடக்கிறது என்பதை அறிந்து அப்படி நடக்கத் தெரிந்து கொள்வதே அறிவு” என்றும் கூறியுள்ளார். இதற்கு மேலும் பல இடங்களில் அறிவுப் பயனை அவர் விளக்கியுள்ளார்.

66

எந்தப் பொருள் பற்றி எவர் சொன்னாலும் சரி, அவர் சொன்ன வுரையில் அமைந்துள்ள மெய்யான பொருளைக் காண்பதே அறிவு” என்றும், “எப்பொருள் எத்தன்மையுடையதாக இருந்தாலும் சரி, அப் பொருளின் மெய்யான தன்மையைக் காண்பதே அறிவு” என்றும் விளக்கியுள்ளார்.

சிலர் பெயர் பெற்றவர்களாக இருக்கலாம்; மிகப் படித்தவர் களாகவும் பதவியில் உள்ளவர்களாகவும் சொல்லாற்றல் மிக்கவர் களாகவும் இருக்கலாம். அதற்காக அவர்கள் சொல்லுபவற்றை யெல்லாம் மெய்ம்மை என்று ஏற்றுக் கொண்டால் அறிவாகுமா? உண் மையைக் காண்பதே அறிவு அல்லவா!

இனிச் சில பொருள்கள் தோற்றத்தில் ஒருவாறும் தன்மையில் வேறொருவாறும் இருக்கலாம். யாழ் வளைவானது; ஆனால், அதன் இசை செவிக்கும் சிந்தைக்கும் இன்பந்தரும். கணை நேரானது; ஆனால், அதன் தாக்குதல் உடலுக்கும் உயிருக்கும் ஊறுண் டாக்கும். குளிர்ச்சியாகத் தோன்றும் ‘பனிப்பழம்’ வெப்பமிக்கது. வெதுப்ப மிக்க மின்சாரத்தாலோ, கம்பியாலோ சில நோய்கள் தீர்வதற்குச் சூடு போடுதல் உண்டு. கசப்பான மருந்து நோய் நீக்கும்; இனிப்பான பண்டத்தை மிகத் தின்றால் நோய் ஆக்கும். இவற்றால், எப்பொருளாயினும் அதன் தன்மையை ஆராயாமல் ஒரு முடிவுக்கு வர முடியாது என்பது புலப்படு மல்லவா! இஃது அறிவின் பயனாம்.

'முக்காலமும் அறிந்த முனிவர்' என்று என்று சிலரைப் பாராட்டுவர். முக்காலங்களிலும் எதிர்காலம் அறிதல் சீரிய அறிவுடையார்க்கே கூடுவதாம். அத்தகைய அறிவுடையவரையே அறிவாளர் என்பது வள்ளுவர் நெறி. ஆதலால் அவர்,

“அறிவுடையார் ஆவது அறிவார்”

என்றார்.அவ்வளவில் நில்லாமல் அதனை அழுத்திக் கூற நினைந்து, “அறிவிலார் அஃதறிகல்லா தவர்"

என்றார்.