உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

21

7. செல்வாக்கு

செல்வமும் வாக்குத் திறமும் சேர்ந்தவர்க்குச் செல்வாக்கு உண்டாகும் என்று கூறுவர். செல்வம் இருப்பவர்க்குப் புகழ் இருப்பது உண்மைதான்! வாக்குத் திறமை இருப்பவர்க்கும் புகழ் ருப்பது உண்மைதான்! இவ்விரண்டையும் தனித்தனியேயும், சேர்ந்தும் பெற்றிருப்பவர்களினும் செல்வாக்குப்படைத்தவர்கள் உலகில் இலரா?

செல்வாக்கு என்பது செல்வத்தால் ஏற்பட்டது அன்று. வாக்கால் ஏற்பட்டதுமன்று. அவையும் ஒருவர் செல்வாக்கிற்குத் துணையாக இருக்கலாம். அவையே செல்வாக்கு அல்ல. அவ்வாறானால் செல்வாக்கு என்பதன் பொருள் தான் என்ன?

எவரொருவர் ஏதேனும் ஒன்றைக் கூறினால், மூலை முடுக்கெல்லாம், பட்டி தொட்டியெல்லாம், நாடு நகரெல்லாம் பரவி, அங்குள்ள மக்களெல்லாம் தம் மூச்சோடு மூச்சாகக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுமாறு செல்லும் வாக்கே செல்வாக்கு ஆகும்! செல்வாக்குக்கு உரியவர் எவரோ அவரே செல்வாக்காளர்; அவர் வாக்கே செல்வாக்கு. மற்றை வாக்குச் செல்லாவாக்கு!

காந்தியடிகள் பெருஞ் செல்வரல்லர்; பெரும் வாக்குத் தேர்ச்சியாளரும் அல்லர். நான்கு முழ வேட்டி துண்டுடன் வறிய உழவர் போலவே தோன்றினார். ஆனால், ஆடை அணிகல அழகுகளெல்லாம் உரு எடுத்தாற்போன்ற ஆங்கிலப் பேரரசரும் வரவேற்று உடனிருந்து உரையாடும் ஒரு நிலையைப் பெற்றார். அவர் என்ன சொல்கிறாரோ- அச்சொல் இந்தியத் துணைக் கண்டத்தின் கடலையும் மலையையும் மோதி நின்றன.மண்ணையும் விண்ணையும் தொட்டன! அழுங் குழந்தைதொட்டு ஆவிசோரும் நிலையுற்றோரையும் ஆட்படுத்தின! அவர்தம் கனிந்த மொழிகள் காந்தத் திறம் பெற்றுக் கவர்ந்தன.

அவரைக் காணவும், அவர் சொற் கேட்கவும் கோடி கோடியாக மக்கள் திரண்டனர்.அவர்சொல்லை நிறைவேற்றுதற்கு