உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வெங்கொடுமைச் சிறைச்சாலையையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாகக் கொண் டனர். “ஆவிசோரினும் அஞ்சிடோம்; நாம் துஞ்சிடோம்" என்று கிளர்ந்தனர்.“உரிமையே எங்கள் உயிர்” என்று அறை கூவினர். அவ்வுரிமையைப் பெற்று உவகையுற்றனர். காந்தியடிகளின் செல்வாக்கின் சிறப்பு அல்லவா இது!

காந்தியடிகள் செல்வாக்கு, ஒரு கால எல்லையில் எல்லையில் கட்டுப்பட்டு நின்று ஒழிவதோ? இந்த வுலகில் வாய்மை எவ்வளவு நாள் வாழுமோ, இன்னா செய்யாமை எவ்வளவு காலம் இலங்குமோ, அறப்போர் எவ்வளவு காலம் நடக்குமோ, மனிதரினம் எவ்வளவு காலம் வாழுமோ அவ்வளவு காலமும் காந்தியடிகள் செல்வாக்கு மறையாது.

கடந்த நூற்றாண்டிலே வாழ்ந்தவர் வள்ளலார். கையால் காசினைத் தீண்டாக் கடுநோன்பும் கொண்ட பெருந்தகை. செல்வருடன் உறவு கொண்டால் அவர்தம் செல்வங் கருதி உறவாடுவதாகக் கருதி விடுதலும் கூடும் என்று அஞ்சி அகன்று ஒதுங்கி ஒடுங்கி வாழ்ந்த ஒப்பில்லாப் பெரியர். ஈட்டுதலோ ஈட்டித் தொகுத்துச் சேர்த்தலோ அவர் அறியாதவை! “வட்டி காண்டு ஈட்டும் பட்டிப் பதகர்” என்று வட்டி கொண்டு ஈட்டுவாரை எள்ளியவர். தமக்கென எந்த ஒன்றையும் வைத்துக் கொள்ளாதவர். தம் உடலைக் கூட வெளியே காட்டிக் கொள்ளுதற்கு நாணி முகத்தை விடுத்து உடல் முழுவதையும் போர்த்துக் கொண்டு உலாவியவர். அடியார் கூட்டம் திரண்டு வர, ஆளடிமைக் கூட்டம் அணுகி வர அஞ்சி ஒதுங்கி அணுவும் இடந்தராமல் வாழ்ந்தவர் அவர். அவர். ஆனால், அவர்தம் 'செல்வாக்கு' க்கு அளவும் உண்டோ?

உள்ள பொருளெல்லாம் எள்ளத்தனை கூடத் தமக்கென வைத்துக் கொள்ளாது வாரி வழங்கியவர்களைக்கூட பெயர் கூறித்தான் பாரி வள்ளல், ஓரி வள்ளல், சடையப்ப வள்ளல் என அழைக்க வேண்டும்! ஆனால், இவரை வள்ளலார் என்றாலே போதும்! மற்றை வள்ளல்களைப் போல் பொருட் செல்வத் தையோ வாரி வழங்கினார்? அவர் வழங்கிய 'திருவருட் செல்வ’த்தைப் போல் எந்த வள்ளல் வழங்கினார்?

திருவருளாற்றல் உலகில் உள்ள அளவும் வள்ள லார் செல்வாக்கு ஒழியுமா? 'சமரச சன்மார்க்கம்' என்னும் ‘பொது நிலை' உலகில் திகழும் அளவும் வள்ளலார் புகழ் மறையுமா?