உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

23

சமய வெறி குறைந்து, பொதுநெறி நிறைந்து வளர்ந்தால் அன்றி இந்த உலகம் வாழாது என்னும் நிலைமை உலகில் உண்டாகும் போது ஓங்கி உலகளந்த உத்தமராகச் சிறப்புற்று விளங்க இருப்பவர் வள்ளலாரே என்பதில் ஐய முண்டா? வள்ளலார் செல்வாக்கு செல்வத்தால் வந்ததா? வாக்கால் வந்ததா?

திருவள்ளுவர் தமிழ் மண்ணிலே தோன்றினார். அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிய வரலாற்றுக் குறிப்பு இல்லை. ஆனால், அவர் வாழ்ந்த வகை இன்னது என்பதை அவர் இயற்றிய திருக்குறள் ஓவியம் போலத் தீட்டிக் காட்டுகிறது.

திருவள்ளுவர் செல்வாக்கு, தமிழ் உலகை தமிழ் இலக்கிய உலகை வயப்படுத்திய அளவுக்கு வேறு எப்புலவர் செல்வாக்கும் வயப்படுத்தி விடவில்லை. திருவள்ளுவர் காலத்திற்குப் பின் வாழ்ந்த எப்புலவரும் அவர் வாக்கைத் தலைமேல் வைத்துப் போற்றத் தவறவில்லை; தத்தம் நூலில், வயிரமணி என வைத்து அழுத்தியது போலத் திருக்குறளை வைத்துப் போற்றி யுள்ளனர். அவர்தம் புகழ் கூறுவதற்கு எழுந்தது திருவள்ளுவ மாலை! அப்படிஒரு நூலுக்குப் புகழ்நூல், தமிழ் உலகில் திருவள்ளுவருக்கு முன்னும் தோன்றியதில்லை; பின்னும் தோன்றியதில்லை. உலகத்துப் பல்வேறு மொழிகளும் போட்டி போட்டுக் கொண்டு மொழிபெயர்க்க வந்த பெருமையும் திருக்குறளைப் போல் வேறு நூலுக்கு வாய்த்ததில்லை. ஏன்?

திருவள்ளுவர் உலகுக்கென நூலை இயற்றினார்; உலகம் அது தனக்குரியதென்று ஏற்றுப் போற்றுகின்றது. இஃது

இயற்கையேயாகும்.

திருவள்ளுவரின் செல்வாக்கு திருக்குறள் உள்ள காலம் வரை என்ன, உலகம் உள்ள வரை வளரவே செய்யும். இன்னும் சொல்லப் போனால் 'உலக அரசு அமையும் நாள் உண்டானால் அன்று உலக மன்றில் ஒரு தனிக்கோலோச்சுவது திருக்குறளாகவே இருக்கும்?

காந்தியடிகளும்,

வள்ளலாரும்,

செல்வாக்குப் பெற்றது எதனால்?

திருவள்ளுவரும்

அவர்கள் தங்களைச் சுற்றிக் கையெட்டும் அளவுக்கு ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்கு உட்பட்டு வாழ்ந்த சிற்றுள்ளம் உடையவர்கள் அல்லர். அவர்கள் இவ் உலகளவு