உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

விரிந்த பெரு வட்டம் மட்டும் போட்டுக் கொள்ளாமல், அப்பாலும் அப்பாலுக்கு அப்பாலும் விரிந்த வட்டமிட்டு வாழ்ந்த பேருள்ளம் படைத்தவர்கள். அவர்கள் தூய உள்ளம் தாயுள்ளம்; தெய்வவுள்ளம். அத்தகைய தாய்மைத் தெய்வ உள்ளத்தில் என்ன சுரக்கும்?

66

'எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே’

என்னும் இன்ப அன்பு சுரக்கும். அவ்வாறு சுரந்தவர் செல்வாக்கே செல்வாக்கு! அஃது உரை கடந்து உயர்வற உயர்ந்த பெருமை யுடையது.