உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

25

8. சொல்லும் சொல்

நாம் சொல்லுஞ்சொல் எத்தகையதாக இருக்க வேண்டும்? என்று வினாவினால் விடை எளிதாகக் கூறி விடலாம். “நாம் பிறரிடமிருந்து எத்தகைய சொல்லைக் கேட்க விரும்புகிறாமோ அத்தகைய சொல்லை நாம் சொல்லுதல் வேண்டும்" என்பதே விடையாம்.

நாம் பிறரிடமிருந்து எத்தகைய சொற்களைக் கேட்க விரும்புகின்றோம்? பிறர் சொல்லும் சில சொற்களைக் கேட்டு மட்டற்ற மகிழ்வடைகின்றோம். சில சொற்களைக் கேட்டு எல்லை யில்லாத துன்பமும் எரிச்சலும் அடைகின்றோம். ஏன்? அச் சொற்கள் செய்யும் திருவிளையாடல்களே அவை.

பன்னீரைத் தெளித்தால் தெளிப்பவனுக்கும் மகிழ்ச்சி யுண்டாகின்றது.தெளிக்கப் பெறுபவனுக்கும் மகிழ்ச்சி உண்டா கின்றது. சந்தனத்தை வழங்கினால் வழங்குபவனுக்கும் இன்பம் உண்டா கின்றது; வழங்கப் பெறுபவனுக்கும் இன்பம் உண்டா கின்றது. இவற்றைப் போல் இனிய சொற்களைச் சொல்வது சொல் பவனுக்கும் இன்பமாம்; கேட்பவனுக்கும் இன்பமாம். இனிமையற்ற சொற்களைச் சொல்வதால் சொல்பவன் மனம் காதிக்கின்றது.கேட்பவன் மனமோ மிகக் கொதிப்படைகின்றது. கொடிய செயல்களைச் செய் வதற்குக்கூட இனிமையில்லாத சொற்கள் தூண்டி விடுவதுண்டு. ஆதலால் தான் திருவள்ளுவர், “இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"

என்றார். இனிய சொற்களை நறிய கனிகளுக்கும், இன்னாத சொற்களை வெறுப்பூட்டும் காய்களுக்கும் உவமையாக அவர் கூறியுள்ளதைக் கருதுதல் வேண்டும்.

இனி, இனிய சொற்களைக் கூற வேண்டும் என்பதற்காக உண்மையில்லாதவற்றைப் புனைந்து சொல்ல வேண்டும் என்பது இல்லை. இல்லை. அவ்வாறு சொல்வது சொல்பவன்,