உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

27

இதனை அடுத்துக் கேடு தருவது கோள் சொல்லு தலாகும். ஒருவனைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் ஆகிய சொற்களை அவன் இல்லாத இடத்திற்குக் கொண்டுபோய்ச் சொல்லுதலே 'கோள்' சொல்லுதல் ஆகும். இக் கோளுரையால் எத்துணையோ நன்மக்கள் கொடுமைகளுக்கு ஆளாகித் தீராத் துன்பப்பட்டுள்ள னர். மனிதர் வாழ்வை இழிவாக்கு பவற்றுள் 'கோள்' உரைக்கு இடம் உண்டு என்பதை உணர்பவர் அதனைக் கொள்ளுதல் அறவே கூடாது.

6

எள்ளத்தனைக் கருத்தும் இல்லாமல் இழிந்த சொற்களை வாரி வழங்குபவர்களும் உளர். இவ் வுடலே நாற்றமிக்கது. வ் வியர்வையாலும், மலத்தாலும், நீராலும், கோழையாலும், சொண்டாலும், சொரியா லும், குறும்பியாலும், பீளையாலும் நிரம்பியது. இத் தீமைகளையெல்லாம் நல்லெண்ணம், நற்சொல், நற்செயல்களால்தான் ஒழிக்க முடியும். இவற்றோடு அருவறுக்கத் தக்கவற்றையே பேசி வருபவரை என்ன பெயரிட்டு அழைக்கலாம்! நாற்றமிக்க வாயைச் சொல்லாலுமா நாறவைக்க வேண்டும்? புதை சாய்க் கடையின் மூடியைத் திறந்துவிட்டால் போல் வாயைத் திறப்பவர்களைக் கண்டு எவரேனும் நெருங்குவரா? உறவாட வருவரா? அவர்கள் நிலை இரங்கத்தக்கதாம்.

சொற்களைச்

இனிப் L பயனற்ற சொல்வதையே தொழிலாகக் கொண்டவர்களும் பலர்; அவர்கள் சொல்லும் சொல்லை விரும்பிக் கேட்டுப் பாராட்டும் வம்பர் கூட்டமும் நாட்டில் உண்டு. பொன்னினும் உயர்ந்த பொழுதைப் பயனற்ற சொல்லால் பாழாக்கும் இவர்கள் பதர் போன்றவர் ஆவர். நீரையும் உரத்தையும் உண்டு வளர்ந்து ஒரு பயனும் தாராது ஒழிவது பதர்; அப் பதருக்கும் பயனிலாதவற்றைக் கூறுபவர்க்கும் உருவ வேற்றுமை அன்றி வேறொரு வேற்றுமையும் இல்லை. அதனால், சினஞ் சிறிதும் கொள்ளாத வள்ளுவப் பெருந்தகை கூட வறிதே பொழுதைக் கழிக்கும் அவனை நினைந்து,

“பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி எனல்”

என்கிறார். ஆதலால்,பயனற்ற சொல்லைச் சொல்லாது ஒழிதல் நயன்மிக்க செயலாம்.