உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

29

9. செயல் வகை

ஔவையார் என்னும் தண்டமிழ்ச் செல்வி பட்டறிவும் படிப்பறிவும் மிக்கவர்; நாடெல்லாம் சுற்றிப் பார்த்து நல்லறிவு பெற்றவர்; அவர் நமக்குப் பயன்படும் நல்ல செய்திகள் பலவற்றைப் பகர்ந்துள்ளார்.

பலா மரத்தில் பூவைக் காண இயலாது; ஆனால், கனியைக் காணலாம்; மாமரத்தில் பூவைக் காணலாம்; அவ்வாறே கனியையும் காணலாம். பாதிரி என்னும் மரத்தில் நறும் பூக்கள் பலவற்றைக் காணலாம்; ஆனால், பூம்பிஞ்சைக் கூடக் காண இயலாது. இவற்றைப் போல் மக்களிலும் முப்பிரிவினர் உளர்.

ஒரு நல்ல செயலை எவரும் சொல்லாமல் தாமே செய்பவர்; சொல்லிச் செய்பவர்; சொல்லியும் செய்யாதவர் - என்பவர் இம்முப் பிரிவினர்.

மூன்று மரங்களைக் காட்டி மூவகை மக்களை விளக்கிய பாட்டியின் பட்டறிவு பாராட்டத்தக்கது. வாழ்க அவர்தம் திறமை!

மரங்களுடன் மூவகை மக்கள்

மக்கள் எப்படிப்

மூவகை மரங்களுடன் பொருந்துகின்றனர்?

பூவாமல் காய்க்கும் பலாமரம் போன்றவர்

- சொல்லாமல் செய்பவர்.

பூத்துக் காய்க்கும் மாமரம் போன்றவர்

- சொல்லிச் செய்பவர்

பூத்துங் காய்க்காத பாதிரி மரம் போன்றவர்

சொல்லியும் செய்யாதவர்!

ஔவையார் கூறியவாறு நாம் சொல்லாமலே செய்யும் பெரியோராகத் திகழ வேண்டும்.

சொல்லாமலே எதைச் செய்வது?

-