உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

செய்யத்தக்க செயலைமட்டுமே செய்தல் வேண்டும்; செய்யத்தகாச் செயலைச் செய்தல் கூடாது. இதனைத் திருவள்ளுவர்,

“செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க

செய்யாமை யானும் கெடும்.'

என்றார். செய்யத் தகாதவை எவை? தனக்குப் பெருமை தராதவை எவையோ, பிறர்க்குத் தீமை தருபவை எவையோ அவை செய்யத் தகாதவை. தனக்குப் பெருமை தருபவை எவையோ, பிறர்க்கு நன்மை தருபவை எவையோ அவை செய்யத் தக்கவை. செய்யத் தக்கவற்றைச் செய்தால் போதுமா? போதாது. செய்தற்கு அரியவற்றைச் செய்தலும் வேண்டும். ஏன்?

கருங்கல்லுக்கும் கட்டி வயிரத்திற்கும், செங்கல்லிற்கும் செம்மணிக்கும், ஆமணக்கு முத்திற்கும் ஆணி முத்திற்கும் வேறுபாடு இல்லையா? மிகவுண்டு. ஆகவே, பிறரால் செய்தற்கு அரியவற்றைத் தேடித் தேடிச் செய்தல் வேண்டும். செய்தற்கு அரியவற்றைச் செய்பவர்தாமே பெரியர்? அப்பெரியாராக இலங்குதல் வேண்டும்.

-

சொல்லாமல் செய்தல் - செய்யத்தக்க வற்றைச் செய்தல் - செயற்கு அரிய செய்தல் ஆகியவற்றை எப் பொழுது செய்வது? இதற்கும் வள்ளுவர் வாய்ப்பாக விடை வழங்குகின்றார்.எப்படி?

கால வாய்ப்பு, இடவாய்ப்பு, துணை வாய்ப்பு, பொருள் வாய்ப்பு ஆகியவை கிட்டுமானால் கிட்டிய அந்த நொடியிலேயே அரிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்.

“எய்தற் கரிய தியைந்தக்கால்; அந்நிலையே செய்தற் கரிய செயல்”

என்று ஏவிய அவர் கண்முன்னர் ஒரு காட்சியையும் காட்டி விளக்குகின்றார்.

ஏரியிலோ குளத்திலோ எத்துணை மீன்கள் ஓடுகின்றன. சிறிய மீன்கள் வரும் போதெல்லாம் கண்ணை மூடிக் கொண்டிருக்கும் கொக்கு ஒரு பெரிய மீன் வரக்கண்டதும்எவ்வளவு

ரைவாகக் குத்தி எடுத்துக் கொள்கின்றது. அதுபோல் அரிய செயலைச் செய்தற்கு வாய்ப்பு அமையுமானால் உடனே முடித்து விடவேண்டும். இதனை விளக்குகின்றது.