உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

10. எவரோடு சேர வேண்டும்?

“சேரிடம் அறிந்து சேர்” என்பது நம் முன்னோர் மொழி. "சேராத இடந்தனிலே சேர வேண்டா என்பதுவும் நம் முன்னோர் மொழியே!

சேரிடம் என்பது யாது? சேரிடம் அறிந்து என் சேர

வேண்டும்?

சேரிடம்என்பது சேரத்தக்க இடமாகும். சேர்ந்த இடத்தைப் பொறுத்தே ஒருவன் இயல்புகள் அமையும்; ஆதலால், சேரிடத்தை அறிந்து சேரவேண்டும்; சேரத் தகாத இடத்தை நெருங்குதல் கூடாது.

நறுமணப் பூம் பொய்கையை நாம் அடுத்துச்செல்கின்றோம். அப்பொழுது அதன் தண்மையையும் நறுமணத்தையும் நாம் அடைகின்றோம். உடலும் உள்ளமும் குளிர்ந்து மகிழ்வடை கின்றோம்.

தீப் பற்றிப் பரவி எரியும் ஓரிடத்தை அடுத்துச் செல்கின்றோம். அப்பொழுது அதன் வெப்பத்தையும் கொடிய நெடியையும் கண்ணின் காந்தலையும் நாம் அடைகின்றோம். உடலும் உள்ளமும் வெதும்பி நோகின்றோம். இத் தன்மைகள் நாம் சேர்ந்த இடத்தால் எய்தியவை அல்லவா! இடத்திற்கு மட்டும் தான் தன்னைச் சேர்ந்தவர்களை இவ்வாறு மாற்றும் தண்மை யுண்டா? இல்லை!

மனித இனத்திற்கும் இத்தன்மை உண்டு. இதனால் தான் “சிற்றினஞ் சேராமை” என்றோர் அதிகாரத்தைத் திருவள்ளுவர் வகுத்தார்.சிற்றினஞ் சேராமை வேண்டும் என்றால் எவ்வினத்தைச் சேர வேண்டும் என்ற கேள்வி எழுமல்லவா! அதனால் "பெரியாரைத் துணைக் கோடல்” என்றோர் அதிகாரத்தையும் அத்திருவள்ளுவர் வகுத்துக் கூறினார்.

பெரியர் யார்? சிறியர் யார்?