உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

33

பிறருக்கென வாழும் பெருந்தகைமை உடையவர் எவரோ அவர் பெரியர்; தமக் கெனவே வாழும் சிறு தன்மை உடையவர் எவரோ அவரே சிறியர். அவரவரைச் சேர்தலால் அவ்வத் தன்மைகள் உண்டாம். சந்தனக் கலவையைத் தொடுதலால் நன் மணமும், சாணத்தைத் தொடுதலால் நாற்றமும் நாம் பெறுவது இல்லையா! அதுபோல்.

நன்மை செய்யும் பெரியவரை நாம் சேருவது எப்படி? தீமை செய்யும் சிறியவரைச் சேராது ஒதுங்கு வது எப்படி? இதனை நம் முன்னோர் நன்கு விளக்கியுள்ளனர்.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று.

ஆம்! நல்லவரைக் காண்க! நல்லவர் சொல் கேட்க! நல்லார்

புகழ் உரைக்க! நல்லாரோடு கூடி இருக்க! என்றனர். அவரே,

66

‘தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற

தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் தீது.

என்றனர்.

وو

இப்பாடல் கூறுவது என்ன? “தீயவரைப் பாராதே; தீயவர் சொல் கேளாதே; தீயவரைப் பற்றிப் பேசாதே; தீயவரோடு கூடி இருக்காதே” என்பதாம்.

மக்களுள் சிறந்து விளங்கிய காந்தியடிகள் மூன்று குரங்குப் பதுமைகள் வைத்திருந்தார். அவற்றுள் ஒன்று வாயைப் பொத்திக் கொண்டிருக்கும்; மற்றொன்று காதைப் பொத்திக்கொண்டிருக்கும்; ன்னொன்று கண்ணைப் பொத்திக் கொண்டிருக்கும். ஏன்?

பேசவேண்டியதைப் பேசு; வேண்டாததைப் பேசாதே. கேட்க வேண்டியதைக் கேள்; வேண்டாததைக் கேட்காதே. பார்க்க வேண்டியதைப் பார்; வேண்டாததைப் பார்க்காதே - இவையே அக்குரங்குப் பதுமை கற்பிக்கும் பாடமாம்.