உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

> இளங்குமரனார் தமிழ் வளம் – 20

தீயோர் தன்மையைத் தெளிவான உவமைகளால் நம் முன்னோர்கள் விளக்கி நமக்கு அறிவுறுத்தி யுள்ளனர்.

“ஈக்கு விடம் தலையில் மட்டும் இருக்கும்; தேளுக்கு விடம் காடுக்கில் மட்டும் இருக்கும்; பாம்புக்கு விடம் பல்லில் மட்டும் இருக்கும்; ஆனால், தீயவர்க்கு விடம் உடலெல்லாம் நிரம்பி இருக்கும்” என்று கூறினர். இதனால் தீயவரைக் கண்டு நாம் ஒதுங்க வேண்டும் என்றும் கூறினர்.

எப்படி ஒதுங்க வேண்டும்? இதனையும் தெளிவு படுத்தியுள்ளனர்.

"கொம்புள்ள மாட்டுக்கு ஐந்து முழம் விலகு; குதிரைக்குப் பத்து முழம் விலகு; கொடிய யானைக்கு ஆயிரம் முழம் விலகு; ஆனால் தீயவர்களின் கண்ணில் தெரியாத தொலைவுக்கு ஓடிவிடு” என்பது அவர்கள் உரை.

சேரும் இடம், சேரும் வகை, சேரும் பயன் இவற்றை அறிந்து பயன் என்ன? அதனைப் பின்பற்றினால்தானே பயன்? தேன் என்றால் இனிக்குமா? நாவில் எடுத்து வைத்தால் அல்லவா இனிக்கும்!