உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

35

11. பொருட் பயன்

பொருள் ஒருவனை ‘உடையவன்' ஆக்குகின்றது. அஃது ல்லாதவன் ‘இல்லாதவன்' எனப்படுகின்றான். பொருள் உடையவன் வேறு எவற்றை இல்லாதவனாக இருந்தாலும் பிறரால் பொருட்டாக எண்ணப் பெறுகின்றான். ஓரிலக்கம் தேடிவிட்டால் ‘இலட்சாதிபதி' என்றும், கோடி தேடிவிட்டால் ‘கோடீசுவரன்’ என்றும், ‘ஈசுவரன்’ என்றும் பாராட்டுமாறு செய்தது அவன் பொருளே அல்லவா! அவன் பொருளுக்காக அப்பொருளை வேண்டி நிற்போர் அவனை எத்துணை மதித்துப் போற்றுகின்றனர்! இம் மதிப்பும் பாராட்டும் தான் பொருளின்

உண்மைப் பயனா?

பொருள் உலக வாழ்க்கைக்கு இன்றியமை யாதது. முற்றுந் துறந்தவர் எனினும் பொருளின்றி வாழுதற்கு இயலாது. ஆதலால் தான்“பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று தெளிவாகக் கூறினார் திருவள்ளுவர். அத்தகைய பொருள் நேரிய வழியில் தன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது என்றால் ஒருவன் பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டும். அவன் பிறக்கும் போது அப்பொருளைக் கொண்டு வந்தானல்லன்; முடிவில் கொண்டு போவானும் அல்லன். அவனொடு தொடர்ந்து வருவது அவன் செய்த அறச் செயல்கள் மட்டுமேயாம். ஆதலால் அப் பொருளை அறச்செயல்களுக்குப் பயன்படுத்துதல் வேண்டும். அதற்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி நல்வழியில் செலவிட வேண்டும். அப் பொருளுக்குத் தன்னைத் தானே அறங்காவலனாக அமைத்துக் கொண்டு செய லாற்ற வேண்டும். இதுவே பொருட்பயனாம்.

பொருள் வாய்ப்பு உள்ளவருக்கு அறம் செய்வது எளிதாகும்; இன்பம் அடைவதும் எளிதாகும். ஆதலால் அறத்தையும் இன்பத்தையும் வழங்கும் பொருள் போற்றிப் பேணத்தக்கதே. அப்படிப் பேணிச் சேர்த்துக் கொண்டவர் எச்செயலையும் எளிதில் நிறைவேற்றிக் கொள்வர். “பணம்