உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

வாழ்க!

14. என் வாழ்வும் பெறுக

நெடிது வாழ்க!

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!

ஆல்போல் படர்ந்து அறுகுபோல் ஊன்றி அரசுபோல் துளிர்த்து வாழ்க!

நூற்றிதழ்த் தாமரை போல வாழ்க!

மழைத்துளியினும் மணற் பெருக்கினும் மல்கி வாழ்க!

இன்னவாறெல்லாம் வாழ்த்துவதை உலகியலிலும் இலக்கிய உலகிலும் கேட்டுளோம்.

வாழ்த்து ஒருவரை வாழவைக்குமா?

வாழவைக்கும் என்பது நம்பிக்கை! வாழ்த்து பவர்க்கும் வாழ்த்தப் பெறுபவர்க்கும் உள்ள நம்பிக்கை! அதனால்தான் மணவாழ்த்து முதல் எத்துணையோ வாழ்த்துகள் வாழ்வில் ம் பெற்றுள்ளன.

66

‘ஆயிரம்திட்டு ஆனையையும் சாய்க்கும்” என்பது பழமொழி என்றால், “ஆயிரம் வாழ்த்து பூனையையும் யானையாக்கும்” என்பது தானே பொருள்.

வாழ்த்துதலால் வாழ்த்துவோர் வாய் இனிக்கும்; கேட்போர் செவி இனிக்கும், வாழ்த்துக்கு உரியவர் நெஞ்சு இனிக்கும்.

இனியவை கூறுதலே கனியினை அனையது என்றால், செவ்விய இனிய வாழ்த்து ஒளவை யுண்ட நெல்லிக்கனி அனையது. அதனால் அன்றே; “நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும் நீயே” என்று ஔவையாரின் வாழ்த்தைப் பெறும்பேறு பெற்றான் அதியமான்.